காதலி அனுப்பிய நிர்வாண புகைப்படத்தை அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் காதலன் அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, குனியமுத்தூரை சேர்ந்தவர் 22 வயதான ரேகா. தூத்துக்குடியை சேர்ந்த தேவேஷ்வர் என்பவரும் இவரும் கோவையில் உள்ள கல்லூரியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கால் கல்லூரி, பள்ளிகள் நீண்ட விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை என்பதால், இருவரும் மணிக்கணக்கில் போனிலேயே பேசி வந்துள்ளனர். அப்போது, உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு போட்டோ அனுப்பு என்று காதலியிடம் கேட்டிருக்கிறார் தேவேஷ்வர்.

நாம் வீடியோ காலில் பேசுக்கொள்கிறோமே பிறகு எதற்கு போட்டோ என ரேகா சொல்ல, அடம்பிடித்து போட்டோவை அனுப்பச் சொல்லி இருக்கிறார் தேவேஷ்வர். பிறகு உன்னை முழுசா பார்க்கணும். போட்டோ எடுத்து அனுப்பு எனக் கெஞ்சிக் கேட்க, ரேகாவும் தேவேஷ்வர் கேட்டது போலவே தன்னை முழுசாக போட்டோ எடுத்து அனுப்பி இருக்கிறார்.

இந்நிலையில், மணிக்கணக்கில் தன் மகள் யாரோடு பேசுகிறாள் என்று நோட்டமிட்ட ரேகாவின் பெற்றோர், அவர் காதலிப்பதை தெரிந்து கொண்டு கண்டித்துள்ளனர். இதன்பின்னர் தேவேஷ்வர் ரேகாவுக்கு தொடர்ந்து போன் செய்தும் போனை எடுக்காததால், என்ன காரணம் என்று மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அதற்கு, என் அப்பா இனி உன்னோடு பழகக்கூடாது எனக்கூறி மெசேஜ் அனுப்பியிருக்கிறார் ரேகா.

இதனால் ஆத்திரம் அடைந்த தேவேஷ்வர், ரேகா அனுப்பிய நிர்வாண படத்தை அவரின் அப்பாவுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளார். இப்படி ஒரு போட்டோ எப்படி அவன் செல்போனுக்கு போனது என தந்தை ஆத்திரத்துடன் கேட்க, என் செல்போனை ஹேக் செய்து எடுத்துவிட்டான் என்று சமாளித்திருக்கிறார் ரேகா. இதையடுத்து, ரேகாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தேவேஷ்வர் மீது புகார் கொடுத்தார் ரேகாவின் தந்தை. புகாரின்பேரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவன் தேவேஷ்வரை போலீசார் கைது செய்தனர். மாணவர் செய்த இந்த இழி செயலால் மாணவியின் மானம் கப்பலேறி விட்டது.