செல்போனை தலைமாட்டில் வைத்து தூங்கிய போது பயங்கரம்.. வெடித்து சிதறியதில் பெண் ரத்த வெள்ளத்தில் பலி.

ஸ்மார்ட் போன் வெடித்து பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இத்துயரச் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. 

Terrified when she slept with her cell phone on her head.

ஸ்மார்ட் போன் வெடித்து பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்துயரச் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. 

20 ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் வைத்திருப்பவர்களை கண்டால் ஆச்சரியமாக பார்ப்பது உண்டு, ஆனால் தற்போது செல்போன் இல்லாதவர்களை பார்ப்பது தான் ஆச்சரியம். மின்சார வசதியே இல்லாத கிராமங்களில் இருப்பவர்கள் கூட இப்போது செல்போன் வைத்திருக்கின்றனர். அதிலும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதில் வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை பயன்படுத்தாமல் இருப்பவர்களையும் விரல் விட்டு எண்ணி விடலாம், கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் செல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை விண்ணைத் தொடும் அளவிற்கு உள்ளது.

Terrified when she slept with her cell phone on her head.

வாரத்திற்கு ஒரு தொழில்நுட்பத்தில் செல்போன்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.  அதேநேரத்தில் செல்போன்கள் வெடித்து அதனால் ஏற்படும் விபத்துகளும் தொடர்கதையாகி வருகின்றன, பைக் ஓட்டும்போது செல்போன் வெடித்தது, சார்ஜ் போட்டு பேசிக் கொண்டிருந்தபோது செல்போன் வெடித்தது, போன்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன, போன் வெடிப்பதால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனால் செல்போன் மீது ஒருவித அச்சம் ஏற்படுகிறது. இதுவரை இந்தியாவில் 20க்கும் அதிகமான செல்போன் வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. 

செல்போன் வெடித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-  டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் redmi 6A  செல்போனை பயன்படுத்தி வந்தார், இந்நிலையில் ராணுவத்தில் பணிபுரியும் தனது மகனிடம் பேசிவிட்டு போனை தலைமாட்டில் வைத்து தூங்கிக் கொண்டு இருந்தார், அடுத்த நாள் அவரது மகன் தாயை சந்திக்க வந்தபோது, அவர் கருகிய நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது மருமகன் மஞ்சித், தனது அத்தை உயிரிழந்தது குறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று இரவு என் அத்தை இறந்துவிட்டார், அவர் redmi 6A பயன்படுத்தியிருந்தார்.

 

இரவில் உறங்கச் செல்லும் போது தலைமாட்டில் வைத்துக்கொண்டு உறங்கினார், அப்போது நள்ளிரவில் செல்போன் வெடித்து சிதறியது, அதில் பலத்த காயம் ஏற்பட்டு  என் அத்தை உயிரிழந்துள்ளார். இது எங்களுக்கு மிகவும் சோகமான நேரம், எங்கள் குடும்பத்திற்கு ஸ்மார்ட்போன் நிறுவனம் உதவ முன்வர வேண்டும் என பதிவிட்டுள்ளதுடன், மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்த தனது அத்தையின் புகைப்படங்கள் மற்றும் வெடித்துச் சிதறிய செல்போன் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, உண்மையிலேயே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ரெட்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios