ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், பங்காரப்பேட்டையில் உள்ள ராக்வெல் உயர்நிலை பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவி சந்தியா. அந்த மாணவியிடம்  அங்கு, பணிபுரியும் சங்கர் என்ற இந்தி ஆசிரியர் அடிக்கடி பாலியல் வன்முறை செய்ய முயன்றுள்ளார். ஆனால் அதில் இருந்து அந்த மாணவியும் தப்பி வந்திருக்கிறார்.

 

அதே நேரத்தில் இதை வெளியில் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று சந்தியாவை ஆசிரியர் சங்கர் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து கொண்டு அந்த மாணவியும் இதை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சங்கர் அந்த மாணவி வகுப்பில் தனியாக இருக்கும்போது பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்பபோதும் மாணவி தப்பி வந்துள்ளார்.

 

நிலைமை மோசமாவதை உணர்ந்த சந்தியா இகு குறித்து தனது தாயாரிடம் தெரிவித்தார் இதையடுத்து கோபமடைந்த தாயார், பள்ளிக் சென்று சங்கருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 


இந்நிலையில், இன்று காலை மாணவி சந்தியா வீட்டில் தனியாக இருந்த போது, அங்கு வந்த சங்கர், அவரின் கழுத்தை பிளேடால் அறுத்தார். மாணவியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அங்கு வந்து, மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், சங்கரை கடுமையாக தாக்கிய பொது மக்கள் அவரை  போலீசாரிடம் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த  சந்தியா  மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.