எந்நேரமும் ஓயாமல் ஆண் நண்பருடன் செல்போனில் கடலை.. கடுப்பான கணவர் செய்த பகீர் சம்பவம்..!

கடந்த 24ம் தேதி தூங்கிக் கொண்டிருந்தபோது தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி சரிதாவை தலையணை வைத்து அழுத்திக் கொன்றுள்ளார். மேலும், சரிதாவின் உடலை போர்வையில் சுற்றி தனது வீட்டிற்கு பின்னால் உள்ள கிணற்றில் போட்டுவிட்டு நாடகமாடியுள்ளது தெரியவந்துள்ளது.

Suspicious of wife behavior.. Dramatic husband arrested after killing his wife

ஆற்காடு அருகே செல்போனில் நண்பருடன் பேசி வந்ததால் சந்தேகமடைந்த கணவன் தனது மனைவியை  கொன்று  உடலை கிணற்றில் வீசி விட்டு காணவில்லை என்று நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் கேஜிஎப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமு(40). இவரது மனைவி சரிதா (27). இருவரும் தற்போது ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள பூட்டுத்தாக்கு பெரிய தெருவில் தங்கி, அங்குள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- சென்னையில் பயங்கரம்.. மனைவி கண் முன்னே பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை..!

Suspicious of wife behavior.. Dramatic husband arrested after killing his wife

இந்நிலையில், தனது மனைவி சரிதா திடீரென காணாமல் போனதாக ராமு கடந்த மாதம் 25ம் தேதி ரத்தினகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, ராமு வீட்டின் அருகே உள்ள கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராமு வீட்டு கிணற்றிலிருந்த ஒரு மூட்டையை வெளியே எடுத்து பார்த்த போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சரிதா சடலமாக கிடந்தார்.  தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Suspicious of wife behavior.. Dramatic husband arrested after killing his wife

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பல்வேறு .அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். சரிதா உடன் திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆனதாகவும் தங்களுக்கு குழந்தை இல்லாததால் இருவரும் மன உளைச்சல் இருந்து வந்ததாக தெரிவித்தார். சரிதா எப்போதும் செல்போனில் யாருடனோ சிரித்து பேசிக் கொண்டிருந்ததால் அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. கடந்த 24ம் தேதி தூங்கிக் கொண்டிருந்தபோது தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி சரிதாவை தலையணை வைத்து அழுத்திக் கொன்றுள்ளார். மேலும், சரிதாவின் உடலை போர்வையில் சுற்றி தனது வீட்டிற்கு பின்னால் உள்ள கிணற்றில் போட்டுவிட்டு நாடகமாடியுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கணவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையும் படிங்க;-  மனைவி குளிப்பதை வளைத்து வளைத்து வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்ட கணவன்.. காரணத்தை கேட்டா கொதிப்பீங்க.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios