கிழக்கு கடற்கரை சாலையில் கல்லூரி இளம் பேராசிரியையை ஒருவரை மிரட்டி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ஆந்திர மாணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆந்திராவை சேர்ந்தவர் விவேஷ்,  காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் திருமுல்லைவாயிலில் வாடகை வீட்டில் தங்கிய பார்ட் டைமில் ஒரு தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்தார். விவேஷ் படித்த பல்கலைக்கழகத்தில் ஆந்திராவை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார்.

ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் விவேசுடன் பேராசிரியை நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கடந்த 19-ந்தேதி விவேஷ் தன்னுடைய படிப்பு முடிந்துவிடுவதாகவும், அதற்காக பார்ட்டி தருவதாகவும் சொல்லி அந்த இளம் பேராசிரியையை வெளியே அழைத்தார். வயதில் சின்ன பையன் தானே, ஒரே மாநிலம் வேறு என்பதால் அதற்கு பேராசிரியை சம்மதித்தார். இரவு 7 மணி அளவில் சோழிங்கநல்லூரில் பேராசிரியை தங்கியிருந்த மகளிர் விடுதிக்கு விவேஷ் சென்றார். பேராசிரியையை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கிழக்கு கடற்கரைசாலையில் சென்றார். மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி அருகே இருள் சூழ்ந்த பகுதிக்குள் சென்றுள்ளார்.

இதனால் பயந்து போன பேராசிரியை இங்கே எதற்கு செல்கிறீர்கள்? என கேட்டதற்கு உள்ளே ஒரு ஹோட்டல் உள்ளது. அங்கு தான் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன் என விவேஷ் சொல்ல, சிறிது நேரத்தில் ஆள் நடமாட்டமே இல்லாத சவுக்கு மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு சென்ற போது திடீரென விவேஷ் வாகனத்தை நிறுத்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி பேராசிரியை ஆடைகளை கழட்ட சொல்லியுள்ளார் . இதனால் பயந்து போன பேராசிரியை கெஞ்சியும் கேட்காத விவேஷ் அவரை நிர்வாணமாக்கி, செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டி விட்டு, பேராசிரியையை தனது வாகனத்தில் ஏற்றி கொண்டுவந்து மீண்டும் விடுதியில் விட்டு சென்றார். மறுநாள் பேராசிரியைக்கு போன் செய்த விவேஷ் தன்னோடு உல்லாசமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் நிர்வாண வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார்.

இதனால் அதிர்ந்து போன பேராசிரியை செம்மஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் விவேசை கைது செய்தனர். அவரின் செல்போனை பறிமுதல் செய்து, அதில் இருந்த பேராசிரியை நிர்வாண வீடியோவை டேப்லெட் செய்துள்ளனர். மேலும் பேராசிரியைக்கு சென்னையில் யாரும் இல்லாததால் யாரும் உதவிக்கு வரமாட்டார்கள் என  அத்துமீறி நடந்துக்கொண்டதாக விவேஷ் போலீசாரிடம் கூறி உள்ளார்.