Asianet News TamilAsianet News Tamil

பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து கூலிப்படை தலைவனை சல்லி சல்லியாக வெட்டி மர்ம கும்பல்... பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்..!

ஸ்ரீபெரும்புதூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கூலிப்படை தலைவன் சங்கர்லாலை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Sriperumbudur Rowdy kidnapped killed
Author
Tamil Nadu, First Published Aug 22, 2019, 1:27 PM IST

ஸ்ரீபெரும்புதூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கூலிப்படை தலைவன் சங்கர்லாலை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக காஞ்சிபுரம் நோக்கி ஒரு கார் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி நினைவிடம் அருகே கார் சென்றபோது, காரின் கதவை திறந்து வாலிபர் ஒருவர் சாலையில் இறங்கி உயிர் பயத்தில் ஓட ஆரம்பித்தார். உடனே காரில் இருந்து 5 பேர் இறங்கி கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அவரை துரத்தினர். Sriperumbudur Rowdy kidnapped killed

பின்னர், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடுரோட்டில் வைத்து வாலிபரை தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஆத்திரம் தாங்காத மர்ம நபர்கள் முகத்தையும் சிதைத்தனர். பட்டப்பகலில் இந்த கொலையை பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் தலைதெறிக்க ஓடினர். இதனையடுத்து, சாவ்காசமாக கொலையாளிகள் காரில் ஏறி தப்பி சென்றனர். Sriperumbudur Rowdy kidnapped killed

இந்த கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தில் ஒரு பை, அடையாள அட்டை கிடந்தது. இதை வைத்து போலீசார் விசாரித்தனர். அதில் இறந்த வாலிபர் தாம்பரம் அருகே மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த லால் என்கிற சங்கர்லால் (38) என்பது தெரியவந்தது. இவர்  பிரபல ரவடி. இவர் மீது தஞ்சாவூரில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு, கோயம்புத்தூரில் ஒரு கொலை முயற்சி, மேலும் பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன. இவர் கூலிப்படை தலைவனாக வலம் வந்ததாகவும் கூறப்படுகிறது. Sriperumbudur Rowdy kidnapped killed

இந்நிலையில் இந்த கொலை பழிக்குப்பழியாக நடைபெற்றதா? தொழில் போட்டி காரணமாக நடந்ததா? என்பது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் கொலைகள் அரங்கேறி வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios