மனைவியை அழைத்து வர சென்றவர் மாமியாரை போட்டு தள்ளிய கொடூரம்..! 

மனைவியை தன்னுடன் அனுப்ப மறுத்த மாமியாரை ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரத்தை அடுத்து உள்ளது ஆதனூர். இங்கு வசித்து வந்த தம்பதியினர் சதீஷ்குமார் மற்றும் சுஷ்மிதா. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுவது வழக்கம். இதற்கிடையில் இருவருக்குள்ளும் சண்டையால் சுஷ்மிதா கோவித்துக்கொண்டு தனது அம்மாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வரலாம் என முடிவு செய்த கணவர் சதீஷ்குமார் மண்ணிவாக்கம் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மாமியார் ஜெயசித்ரா என்பவர் சுஷ்மிதாவை  அனுப்ப மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் அங்கிருந்த கத்தியை எடுத்து மாமியாரின் கழுத்தை ஓங்கி வெட்டியுள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே ரத்தம் வடிய வடிய பரிதாபமாக உயிரிழந்தார் ஜெயசித்ரா.பின்னர் இந்த தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய அவரை தீவிரமாக தேடி வருகின்றனர் போலீசார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.