மதுரையில் இளைஞரை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரையில் இளைஞரை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள டபேதார் சந்தை பகுதியை சேர்ந்தவர் நிருபன் சக்கரவர்த்தி. இவர், சுண்ணாம்பு பவுடர் ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை நிருபன் சக்கரவர்த்தி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென வீடு புகுந்த 6 பேர் கொண்ட அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தடுக்க வந்த மனைவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிருபன் சக்கரவர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோவில் திருவிழாவின் போது அதே பகுதியை சேர்ந்த முத்து இருளனுக்கும், சக்கரவர்த்திக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.