அண்ணியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த கொழுந்தன்கள்.. அண்ணனே உடந்தை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
உத்தரபிரதேசத்தின் பதேப்பூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் ஒன்றில் இருந்த தண்ணீர் தொட்டி ஒன்றில் நிர்வாண கோலத்தில் பெண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அண்ணியை கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் தொடர்பாக கொழுந்தனர்கள் 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பதேப்பூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் ஒன்றில் இருந்த தண்ணீர் தொட்டி ஒன்றில் நிர்வாண கோலத்தில் பெண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க;- ஆசிரியை தீபிகாவை இதற்காகத்தான் கொன்று புதைத்தேன்.. இளைஞர் கொடுத்த பகீர் வாக்குமூலம்!
இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரோகித் லோதி, ராமசந்திரா என்ற புட்டு, சிவம் என்ற பஞ்சம் மற்றும் சோனு லோதி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.
தனது அண்ணியை கணவரின் சகோதரர்கள் 4 பேரும் திருவிழாவுக்கு செல்லலாம் என்று அழைத்து சென்றுள்ளனர். இதன் பின்னர் அண்ணி என்று கூட பாராமல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த உறுப்பில் கடுமையான காயம் மற்றும் ரத்த போக்கால் அந்த பெண் உயிரிழந்துள்ளார். முகம் அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவரது முகத்தை சிதைத்துள்ளனர். இந்த திட்டத்திற்கு பெண்ணின் கணவரே முக்கிய காரணமாக இருந்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க;- வேறொருவருடன் கள்ளத்தொடர்பு.. நைசாக மனைவியை கூட்டுட்டு போய் கணவர் என்ன செய்தார் தெரியுமா?
இந்த கொலையை திட்டமிட்டு செயல்படுத்திய பெண்ணின் கணவர் துபாய் நாட்டில் வசித்து வருகிறார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.