ஒன்றுமறியாத பிஞ்சுக்குழந்தைகளுக்கு தாயே விஷம் கொடுத்து கொலை செய்த கொடூர சம்பவத்தை செய்தி மூலம் அறிந்தவர்களே பதை பதைதுப்போயிருக்கின்றனர். கல்நெஞ்சையும் கண்ணீர் விட செய்யும் ஆறா துயராக ஆகி இருக்கிறது அந்த பிஞ்சு குழந்தைகளின் இழப்பு. 

செய்தியில் கேட்போருக்கே இவ்வளவு வேதனை என்றால், அந்த  பகுதியை சேந்தவர்களுக்கும், அந்த குழந்தைகளுடன் நெருங்கி பழகியவர்களுக்கு அதை விட வேதனையளித்திருக்கிறது இந்த சம்பவம். இந்த இரண்டு குழந்தைகள் பற்றி பேச வாயெடுத்டாலே நா தழுதழுக்கிறது அப்பகுதி மக்களுக்கு. 

அதிலும் அப்பகுதியை சேந்த பெண் ஒருவர் அபிராமி பற்றி கூறுகையில் , அந்த பொண்ணு எப்போதுமே இப்படி தான் . அதோட நடை உடை பாவனை எதுவுமே சரி கிடையாது. இதனாலேயே யாரும் அது கூட நெருங்கி பழகமாட்டாங்க. எப்போ பார்த்தாலும் மேக்கப் கலையாம இருக்கும். அதோட டிரெஸிங் கூட சரிகிடையாது. இப்போ எல்லாரும் சொல்றாங்களே, அந்த பிரியாணிகாரனை விட அதிகமா வேற ஒருத்தன் கூட தான் அத நாங்க பாத்துருக்கோம். எப்போ பாரு ஸ்கூட்டில ஊர் சுத்திகிட்டே இருக்கும். 

குழந்தைங்கள கூட அந்த வீட்டு ஓனர் தான் பாத்துக்குவாங்க. ஆனா அந்த குழந்தைங்க ரொம்ப அழகா இருக்கும் அழகா பேசும். பார்க்குற யாருக்குமே அந்த குழந்தைங்கள் உடனே பிடிச்சு போயிடும். அவ்வளவு சமத்து. எனக்கு 16 வருஷமா குழந்தைங்க கிடையாது. இந்த அபிராமி அந்த குழந்தைங்கள அப்படியே விட்டுட்டு போயிருந்தா கூட நான் எடுத்து வளர்த்திருப்பேன் அந்த குழந்தைங்கள. எப்போதும் சிரிச்சு விளையாடுற குழந்தைங்கள பெட்ஷீட்ல தூக்கிட்டு வந்தத பார்த்ததுமே என் உயிரே நடுங்கி போச்சு. இப்படி எல்லாம் நடக்கும்னு நினைச்சு கூட பார்த்ததில்ல நாங்க என கண்கலங்கி இருக்கிறார்.

அபிராமியின் வீட்டின் எதிர்புறம் இருக்கும் கடைக்காரர் கூட இரண்டு குழந்தைகளை நினைத்து பேசும் போது கண்ணீருடன் தான் பேசுகிறார். ரொம்ப புத்திசாலி பையன். என் கடைக்கு தான் அடிக்கடி ஸ்னாக்ஸ் வாங்க வருவான். எனக்கொரு லேஸ் எங்க பாப்பாக்கு ஒரு லேஸ்னு ரொம்ப தோரணைய பெரிய மனுஷங்க மாதிரியே கேப்பான். அவங்க பாப்பா மேல அவனுக்கு அவ்வளவு பாசம் . அந்த பொம்பளைய பத்தி நினைச்சாலே எரிச்சலா வருது. முதல் நாள் விஷம் கொடுத்தப்பவே இந்த பையன் பிழைச்சுக்கிட்டான். 

அப்போவாவது அவன விட்டிருக்கலாம். மறுபடியும் அவன அனுப்பியே பால் வாங்கிட்டு வர சொல்லி அதுல விஷத்த கலந்து கொடுத்துருக்கா. அத குடிச்சிட்டு அவளுக்கு பாசமா முத்தம் கொடுத்திருக்கான் அந்த பையன். அவ்வளவு பாசமான பையன பொய் கொன்னுட்டாளே , ஒரு தாய்க்கு இப்படி மனசு வருமா ! என ஆதங்கப்பட்டிருக்கிறார் அந்த கடைக்காரர்.