ஷாக்கிங் நியூஸ்.! ரூ.70,000 கொடுத்து கல்யாணம் செய்த மனைவி! கழுத்தை நெரித்து கொன்ற கணவர்! சிக்கியது எப்படி?

டெல்லியின் ஃபதேபூர் பெரி பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Shocking news... delhi man kills wife and Dumps Body in Forest Area

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் கொலை செய்து உடலை காட்டுப் பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் ஃபதேபூர் பெரி பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்யப்பட்ட பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இதையும் படிங்க;- மூன்று குழந்தைகளின் தாய் பண்ற வேலையா இது! 3 மாதங்களாக 16 வயது சிறுவனுடன் உல்லாசம் அனுபவித்த 27 வயது இளம்பெண்!

இதனிடையே, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சனிக்கிழமை அதிகாலை ஆட்டோ ஒன்று சென்று திரும்பியது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோ நெம்பரை வைத்து அதன் ஓட்டுநர் அருணை கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட பெண் தரம்வீரின் மனைவி ஸ்வீட்டி என்று கூறினார். 

இதையும் படிங்க;-  சித்தியை கரெக்ட் செய்து உல்லாசம்! தடையாக இருந்த அத்தையின் கதையை முடித்த மருமகன்! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஆதரவற்ற பெண்ணான ஸ்வீட்டியை 70,000 ரூபாய் பணம் கொடுத்து தரம்வீர் திருமணம் செய்து மனைவியாக்கியுள்ளார். ஆனால், அடிக்கடி சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி ஸ்வீட்டி வெளியில் தங்கியுள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட தரம்வீர் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி அரியானா எல்லையில் கழுத்தை நெரித்து கொலை செய்து காட்டுப்பகுதியில் வீசியதாக தெரிவித்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தரம்வீர், சத்யவான், அருண் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios