தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரபல மதுபான பப் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த மே 28ம் தேதி 17 வயதுடைய சிறுமி பார்ட்டியை முடித்துக்கொண்டு சாலையில் சென்றுக்கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக சொகுசு காரில் ஏற்றிக்கொண்டு 2 மணி நேரம் சாலைகளில் சுற்றியபடி அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு இறக்கிவிட்டு சென்றனர்.
பிளஸ் 2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தற்போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரபல மதுபான பப் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த மே 28ம் தேதி 17 வயதுடைய சிறுமி பார்ட்டியை முடித்துக்கொண்டு சாலையில் சென்றுக்கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக சொகுசு காரில் ஏற்றிக்கொண்டு 2 மணி நேரம் சாலைகளில் சுற்றியபடி அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு இறக்கிவிட்டு சென்றனர்.

இதனையடுத்து, சிறுமி நடந்த சம்பவத்தை கூறி தந்தையிடம் கதறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், தனியார் பள்ளி நிர்வாகம் பிளஸ் 2 மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடத்த ரூ.2 லட்சம் பணம் செலுத்தி முன்பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் 120 மாணர்கள் பங்கேற்றனர். அதில், பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியும் ஒருவர். பப்பில் 21 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் சிறுவர், சிறுமிகளுக்கு அனுமதி அளித்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.