தான் அதை கண்டித்து வந்ததுடன் கடந்த நவம்பர் மாதம் இரு  வீட்டார் முன்னிலையில் சமாதானம் பேசி முடித்ததாகவும் ஆனால் தொடர்ந்து யாஸ்மின் தன் தம்பி உடனான கள்ள உறவை கைவிட மறுத்ததால், உறங்கச் சென்ற மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றதாகவும் பின்னர் அதை தற்கொலை என கூறி நாடகமாடியதையும் அப்துல் ரகுமான் ஒப்புக்கொண்டார். 

திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவி தன் சகோதரர்களுடன் பல மாத காலமாக உறவில் ஈடுபட்டு வந்த நிலையில் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட கணவன் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை பிராட்வேயில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ஒருபுறம் அறிவியல் வளர்ச்சி மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், மற்றொருபுறம் கொலை கொள்ளை என குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தொலைபேசி ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் நல்ல விஷயங்களுக்கு பயன்படுவது காட்டிலும் அதை வைத்து பலர் தவறான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது, தொழில்நுட்பம் மேற்கத்திய தாக்கம், இந்திய குடும்ப வாழ்வியலில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதை காண முடிகிறது. பொருளாதார மோசடி, பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பரவ விடுதல், பெண்களை பின் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்தல், காதலிப்பது போல நடித்து ஏமாற்றுதல், நகைக்காக திருமண மோசடி செய்வது, திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபடுதல் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இதையும் படியுங்கள்: காலையிலேயே மத்திய அமைச்சருக்கு போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்.. உருக்கமாக சொன்ன அந்த ஒரு வார்த்தை

படுக்கையில் சடலம்:

அந்த வகையில் சென்னை பிராட்வேயில் கணவனுக்கு தெரியாமல் அவரது சகோதரனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த மனைவி அடித்து கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சென்னை பிராட்வே புத்திசாகிம் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (37) வயதான இவர் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார், கடந்த 12 ஆண்டு முன்பு இவருக்கு யாஸ்மின் (27) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நீண்ட நேரம் ஆகியும் யாஸ்மின் படுக்கையிலிருந்து எழுந்திருக்க வில்லை, இதனால் சந்தேகமடைந்த அவரது தாயார் பரிதா பானு தனது மகளை எழுப்ப முயற்சித்தார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை, இதனால் அருகில் இருந்த மருத்துவரை அழைத்து வந்து பார்த்த போது யாஸ்மின் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

கழுத்தை நெறித்து கொன்ற கணவன்:

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த எஸ்பிளனேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த யாஸ்மின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடும்ப தகராறு காரணமாக யாஸ்மின் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் அப்துல் ரகுமான் கூறினார். இதனால் இதை போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது, அதில் யாஸ்மின் கணவரான அப்துல் ரகுமானை பிடித்து போலீஸ் தங்களுக்கு உரிய பாணியில் விசாரித்தனர். மனைவியை தான் கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். தனது மனைவி யாஸ்மி தனது சகோதரன் இடையே பல மாதங்களாக கள்ள உறவு இருந்து வந்ததாக கூறினார்.

இதையும் படியுங்கள்: ஜெயக்குமாரை பார்த்ததும் சூடான மாஜி.. கள்ள ஓட்டு போட சென்னதே ஸ்டாலின்தான்.. கொஞ்சம் கூட அடங்காத சி.வி சண்முகம்.

தம்பியுடன் தகாத உறவு: 

தான் அதை கண்டித்து வந்ததுடன் கடந்த நவம்பர் மாதம் இரு வீட்டார் முன்னிலையில் சமாதானம் பேசி முடித்ததாகவும் ஆனால் தொடர்ந்து யாஸ்மின் தன் தம்பி உடனான கள்ள உறவை கைவிட மறுத்ததால், உறங்கச் சென்ற மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றதாகவும் பின்னர் அதை தற்கொலை என கூறி நாடகமாடியதையும் அப்துல் ரகுமான் ஒப்புக்கொண்டார். அதன்பிறகு இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து போலீஸார் ரகுமானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மனைவியின் தகாத உறவு காரணமாக கணவனே மனைவியை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.