அவன் ஒரு சீரியல் கில்லர், தெரியுமா ? கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்

கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Shafi is a psychopath said Kochi City Police Commissioner at Kerala human sacrifice case

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பகவால் சிங். இவரிடம் வரும் நோயாளிகளின் நோய்களை குணமாக்கி வந்தார். இவரது மனைவி லைலா. ஹீலிங் எனப்படும் இந்தத் தொழிலை இவர்கள் பரம்பரை, பரம்பரையாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பகவால் சிங்குக்கு பணம் செழிப்பதற்காகவும், வளத்தைப் பெருக்குவதற்காகவும் 2 பெண்களை அழைத்து வந்து நரபலி கொடுத்த விவரம் எங்களுக்குத் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த பெரும்பாவூர் ஷபி கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்று போலீசார் கூறியுள்ளனர்.

Shafi is a psychopath said Kochi City Police Commissioner at Kerala human sacrifice case

இதையும் படிங்க..Alien : டிசம்பர் 8.! பெரிய விண்கல்லில் ஏலியன்கள் பூமிக்கு வரும்.. கணித்து சொன்ன டைம் ட்ராவலர் - சாத்தியமா ?

4 மாதங்களுக்கு முன் காலடி பகுதியில் ஆயுர்வேத மருந்து விற்பனை செய்யும் ரோஸ்லியை,ஷாபி தொடர்பு கொண்டுள்ளார். கணவனை விவாகரத்து செய்த ரோஸ்லி, காலடி பகுதியில் மற்றொருவருடன் வசித்து வந்தார். ரோஸ்லியை அணுகிய ஷாபி, தனக்குத் தெரிந்த ஒருவர் ஆபாச படம் எடுப்பதாகவும், அதில் நடித்தால் 10 லட்சம் பணம் கிடைக்கும் என்றும் ஆசை காட்டியுள்ளார். அதற்கு ரோஸ்லி சம்மதித்துள்ளார்.

பின்னர், ரோஸ்லியை பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பிறகு ரோஸ்லியை கட்டிலில் படுக்க வைத்து கை, கால்களை கட்டினர். சுத்தியால் ரோஸ்லி தலையில் அடித்து பகவல் சிங் கொலை செய்தார். இதனையடுத்து பகவல் சிங்கும், லைலாவும் ரோஸ்லி உடலை துண்டு துண்டாக வெட்டி, ரத்தத்தை அறை முழுவதும் தெளித்து விடிய விடிய பூஜை நடத்தினர்.

இதையும் படிங்க..சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் திமுக எம்.பி ஆ.ராசா.. சிபிஐ எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் திமுக

Shafi is a psychopath said Kochi City Police Commissioner at Kerala human sacrifice case

உடல் பாகங்கள் மீது உப்பை தூவி வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளனர். புதைத்த இடத்தில் மஞ்சள் செடிகளை நட்டுள்ளனர். ஆனால், நரபலி கொடுத்து பல மாதங்களாகியும் பகவல் சிங்கின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

பிறகு மற்றொரு பெண்ணை நரபலி கொடுக்க வேண்டும் என்று கூற, பத்மாவை அணுகி ரோஸ்லியிடம் கூறியது போலவே பண ஆசை காட்டியுள்ளார். அவரை வரவழைத்து கொன்று இருக்கிறார்கள். அடுத்தடுத்து இரண்டு பெண்கள் காணாமல் போனதை அடுத்து, பிறகு தான் நரபலி விவகாரம் வெளியே வந்தது.

இதுகுறித்து மேலும் கூறிய போலீசார், 2 பெண்களையும் மிக கொடூரமாக துன்புறுத்தி நரபலி கொடுத்துள்ளனர். பெண்களின் மார்பகங்களை அறுத்தும் பிறப்புறுப்பில் குத்தியும் ரத்தத்தை எடுத்து பூஜை செய்துள்ளனர் என்றும், இவர் சீரியல் கில்லர், சைக்கோ போன்ற மன நிலை கொண்டவராகவும் உள்ளார். எனவே இவரை விசாரிப்பதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது என்றும் கூறினார்கள்.

இதையும் படிங்க..2 பெண்களை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த விவகாரம்.. போலீசாருக்கு ஷாக் கொடுத்த திக் திக் நிமிடங்கள் !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios