Asianet News TamilAsianet News Tamil

அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி.. கழிவறைக்கு அழைத்துச்சென்று சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. ஊழியர் கைது.!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.  இதையடுத்து சிறுவனை தாய் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுவனை அமர வைத்துவிட்டு தாய் மருந்து வாங்க சென்றுள்ளார். 

sexually harassing a boy...Employee arrested tvk
Author
First Published Sep 7, 2023, 2:57 PM IST

சிறுவனை கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் துப்புரவு ஊழியர் போச்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.  இதையடுத்து சிறுவனை தாய் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுவனை அமர வைத்துவிட்டு தாய் மருந்து வாங்க சென்றுள்ளார். 

இதையும் படிங்க;- தமிழகத்தை அதிரவைத்த பல்லடம் கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளிக்கு இரண்டு கால்களும் முறிந்தது.. நடந்தது என்ன?

அப்போது சிறுவனை, அந்த மருத்துவமனையில் துப்புரவு பணியாளரான ரமீஸ் என்பவர் கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். அப்படி இருந்த போதிலும் நடந்த சம்பவத்தை அழுதபடியே தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு சக நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இதையும் படிங்க;-  தமிழகத்தில் ஷாக்கிங் நியூஸ்.. டாட்டூ குத்திய கல்லூரி மாணவர் உயிரிழப்பு.. எப்படி தெரியுமா?

இதனையடுத்து, துப்புரவு பணியாளரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.  மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரமீஸ் மீது காவல் நிலையத்தில்  தாய் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து ரமீஸ் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios