தமிழகத்தை அதிரவைத்த பல்லடம் கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளிக்கு இரண்டு கால்களும் முறிந்தது.. நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசில் சரணடைந்த முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் தப்பி ஓட முயற்சித்த போது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதையும் படிங்க;- தமிழகத்தை அலறவிட்ட பல்லடம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. வேறு வழியில்லாமல் முக்கிய குற்றவாளி செய்த காரியம்
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய திருச்சியை சேர்ந்த செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது கொலைக்கு பயன்படுத்திய கத்தியை தொட்டம்பட்டி என்ற இடத்தில் மறைத்து வைத்துள்ளதாக கூறியதை அடுத்து செல்லமுத்துவை போலீசார் அழைத்து சென்ற போது தப்பிக்க முயற்சி செய்த போது கீழே விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் மற்றும் சோனை முத்தையா ஆகியோர் திருப்பூர் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தனர். இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த இடத்திற்கு முக்கிய குற்றவாளியான வெங்கடேஷை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது போலீசார் மீது மண்ணைத் தூவி தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் போலீசார் வெங்கடேஷ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதையும் படிங்க;- குலைநடுங்க வைத்த பல்லடம் கொலை! மறைச்சு வச்சுக்கிற கத்திய காட்டுகிறேன் சொல்லிட்டு! எஸ்கேப்பாக நினைத்த குற்றவாளி
அப்போது நான்கு குண்டுகளில் இரண்டு குண்டுகள் வெங்கடேஷின் இரண்டு காலில் பாய்ந்தது. இதில் இரண்டு கால்களும் முறிந்தது. இதனையடுத்து வெங்கடேஷை, பல்லடம் அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். வெங்கடேஷ் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.