சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் பெரம்பலூர் முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பீர்மேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் 15 வயது மகள் மகள் சத்யா. பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்து வந்தார். இந்நிலையில் அவர் திடீர் என்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடல்நலக் குறைவால் சிறுமி இறந்ததாக ராஜ்குமார் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தனது மகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக சந்திரன் புகார் கூறினார்.

அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், திமுக மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர் ஆகியோரை கைது செய்தனர். 2006-2011 வரை பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏவாக ராஜ்குமார் இருந்தவர்.