கோச்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், ஹெப்சிபாவுக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டார். இதுகுறித்து ஹெப்சிபா ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர் ரயில் அரக்கோணம் ரயில் நிலையம் வந்தவுடன், அங்கு இறங்கி ரயில்வே காவல் நிலையத்திற்கு அந்த வாலிபரை அழைத்து சென்று புகார் அளித்தார்.

ஓடும் ரயிலில் பெண் வழக்கறிஞருக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஓடும் ரயிலில் பாலில் தொல்லை

சென்னை அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவரது மனைவி ஹெப்சிபா(44). இவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். கடந்த 9ம் தேதி கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடந்த மாவட்ட நீதிபதி தேர்வில் பங்கேற்றார். நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட எஸ்-11 கோச்சில், பயணம் செய்தார்.

அலறி கூச்சலிட்ட பெண்

அப்போது, அதே கோச்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், ஹெப்சிபாவுக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டார். இதுகுறித்து ஹெப்சிபா ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர் ரயில் அரக்கோணம் ரயில் நிலையம் வந்தவுடன், அங்கு இறங்கி ரயில்வே காவல் நிலையத்திற்கு அந்த வாலிபரை அழைத்து சென்று புகார் அளித்தார்.

ஐடி நிறுவன ஊழியர் கைது 

இதனையடுத்து, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த கந்தன்(26) என்பதும், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.