எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மகள்களிடம் பாலியல் சீண்டல்.. கள்ளக்காதலனை கொன்று ஆற்றில் வீசிய கள்ளக்காதலி..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த வேலங்காடு பகுதியை சேர்ந்தவர் வினோதா (34). இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். 

Sexual harassment of daughters...Boyfriend murder in trichy

மகள்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுட்டதால் கள்ளக்காதலனை கொலை செய்து உடலை காவிரி ஆற்றில் வீசிய பெண் 4 மாததங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.  

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த வேலங்காடு பகுதியை சேர்ந்தவர் வினோதா (34). இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து, 3 குழந்தைகளுடன் திருச்சி மாவட்டம் முசிறி வந்தார். பின்னர், கூலி வேலைக்கு சென்று தாய் வினோதா குழந்தைகளை காப்பாற்றி வந்துள்ளார். 

இதையும் படிங்க;- முனகல் சத்தம்.. அரை நிர்வாணத்தில் அண்ணியுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த கொழுந்தன் என்ன செய்தார் தெரியுமா?

Sexual harassment of daughters...Boyfriend murder in trichy

இந்நிலையில், செங்கல்சூளையில் வேலை பார்த்து வந்த போது விழுப்புரத்தை சேர்ந்த பிரபு (36) என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் கடந்த 8 வருடங்களாக செங்கல்சூளையில் வேலை செய்து கொண்டு கணவன், மனைவியாக குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் காவிரி ஆற்றில் உடல் முழுவதும் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் யார் என்ற விவரம் தெரியாததால்  பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

Sexual harassment of daughters...Boyfriend murder in trichy

இந்நிலையில், பிரபுவின் தந்தைத என் மகனை காணவில்லை என்று முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து அவருடன் குடும்பம் நடத்தி வந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அந்த பெண் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். தனது பெண் குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டார். அதனை நேரில் பார்த்து கண்டித்தும் கேட்காததால் தலையில் அரிவாளால் வெட்டி கொலை செய்து காவிரி ஆற்றில் தள்ளிவிட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து, அந்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க;-  எனக்கு இன்னும் அடங்கல! ஒன்ஸ்மோர் கேட்ட கள்ளக்காதலன்! மறுத்த கள்ளக்காதலி! இறுதியில் காட்டில் நடந்தது என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios