சென்னையில் அண்ணன் மனைவி எதிரில் நிர்வாணமாக நின்று ஆபாச செயலில் ஈடுபட்ட மைத்துனரை போலீசார் கைது செய்துள்ளனர். அண்ணி என்றும் பாராமல் தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பெண் கொடுத்த புகாரை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னையில் அண்ணன் மனைவி எதிரில் நிர்வாணமாக நின்று ஆபாச செயலில் ஈடுபட்ட மைத்துனரை போலீசார் கைது செய்துள்ளனர். அண்ணி என்றும் பாராமல் தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பெண் கொடுத்த புகாரை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திரும்பிய பக்கமெல்லாம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதை சார்ந்த குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காவல் துறையும், அரசும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, காதலிப்பதாக கூறி பெண்களை கற்பழிப்பது, திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்து பாதியில் கைவிடுவது, திருமணம் செய்துகொண்ட வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது என எண்ணற்ற கொடுமைகளைப் பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் குடும்பத்திலுள்ளவர்களாலும் பல நேரங்களில் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படும் கொடுமைகளும் அரங்கேறி வருகிறது. அந்த வரிசையில் அண்ணன் மனைவி என்றும் பாராமல் மைத்துனன் அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை பழைய திருமங்கலம் பகுதியை சேர்ந்த பெண் தனது கணவருடன் நேற்று திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது கணவரின் தம்பி தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் சம்பவத்தன்று அண்ணி என்றும் பாராமல் தனது முன்பு நிர்வாணமாக நின்று ஆபாச செயல்கள் புரிந்து தன்னை பாலியல் உறவுக்கு அழைத்ததாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் தனது மைத்துனர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மகளிர் போலீசார் அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆபாச செயல்கள் புரிந்த பழைய திருமங்கலம் பகுதியை சேர்ந்த மைத்துனர் சுரேஷ்குமார் (39) என்பவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மைத்துனன் அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
