மருகளுக்கு பாலியல் தொல்லை.. அண்ணியிடம் எல்லை மீறி மச்சினன்.. இறுதியில் நடந்தது என்ன?
தாம்பரம் அடுத்த படப்பையை சேர்ந்த இளம் பெண் ஜெயஸ்ரீ (27). இவருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி சென்னையை அடுத்த நாவலூரை சேர்ந்த சதீஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்காக பெண் வீட்டார் தரப்பில் 40 சவரன் நகை, பாத்திரம், 18 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான சீர்வரிசை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மருமகளுக்கு வரதட்சணை கொடுமையோடு பாலியல் தொல்லை கொடுத்து வந்த மாமனாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரதட்சணை கொடுமை
தாம்பரம் அடுத்த படப்பையை சேர்ந்த இளம் பெண் ஜெயஸ்ரீ (27). இவருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி சென்னையை அடுத்த நாவலூரை சேர்ந்த சதீஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்காக பெண் வீட்டார் தரப்பில் 40 சவரன் நகை, பாத்திரம், 18 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான சீர்வரிசை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாலியல் தொந்தரவு
இந்தச்சூழலில், திருமணம் ஆன சில மாதங்களிலேயே ஜெயஸ்ரீயிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் தொந்தரவு செய்துள்ளனர். குறிப்பாக மாமியார் சாந்தகுமாரி, மாமனார் நடராஜன், கணவரின் சகோதரன் ராஜேஷ் ஆகியோர் கார், பணம் வாங்கிவருமாறும் தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வரதட்சணை கொடுமை பாலியல் தொந்தரவானது. மாமனார் நடராஜன், கணவரின் சகோதரன் ராஜேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து ஜெயஸ்ரீக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
மகளிர் காவல் நிலையத்தில் புகார்
இது குறித்து கணவரிடம் சொன்னாலும் நடவடிக்கை இல்லை. கணவரும் பெற்றோர் பேச்சை கேட்டு வரதட்சணை கேட்டுள்ளார். நாளுக்கு நாள் கணவர் வீட்டாரின் கொடுமை அதிகரிக்கவே அங்கிருந்து தப்பித்து தனது பெற்றோரின் வீட்டுக்கு வந்து நடந்தவற்றை கூறி கதறி அழுத்துள்ளார். ஜெயஸ்ரீ தனக்கு ஏற்பட்ட வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கைது
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த தாம்பரம் போலீசார் ஜெயஸ்ரீயின் மாமனார் நடராஜனைக் கைது செய்துள்ளனர். இவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள நடராஜனின் மகன்கள் மற்றும் மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள்.