கோவையின் மிக முக்கியமாக வளர்ந்து வரும் பகுதி சரவணப்பட்டி.புதிதாக குறைந்த பட்ஜெட்டில் வீடு வாங்க விரும்புபவர்கள் தேர்ந்தெடுக்கும் பகுதியும் சரவணப்பட்டி தான். கடந்த பத்து ஆண்டுகளில் இந்த  பகுதி மிக பெரிய வளர்ச்சி அடைந்து உள்ளது. 

இந்த பகுதியில் தான், எச்சிஎல், உள்ளிட்ட பெரிய சாப்ட்வேர் கம்பெனி முதற்கொண்டு அநேக கம்பெனிகளும் உள்ளது. அந்த வகையில், குடியிருப்புகள் இந்த பகுதியில் அதிகமானதால், அப்பகுதி வாசிகளுக்காக உருவானது தான் எஸ்என்எஸ் கல்லூரி. அந்த கல்லூரியின் தாளாளர் சுப்பிரமணியம் கோவையில் ஒரு பிரபலமான மனிதர் ஆவார். வயதான இவர் செய்த அலுச்சாட்டியங்கள் மெல்ல மெல்ல வெளியே தெரிய தொடங்கி அதிர்ச்சி அலைகளை  ஏற்படுத்தி உள்ளது. 

23 வயதே ஆன இளம்பெண்ணை அதுவும் பெண் ஊழியரை தனது அறையில் வைத்து, 64 வயது தாத்தா சுப்பிரமணியன் செய்த அட்டூழியங்கள் அச்சில் ஏற்ற முடியாது. அந்த அளவிற்கு தாத்தா துள்ளி குதித்து எகிறி இருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்த 23 வயது பெண் தான் அனுபவித்து வந்த கொடுமைகளை சுப்பிரமணியன் மகன் நிலனிடம் பலமுறை தெரிவித்தும், அவருக்கு எந்த நீதியும் கிடைக்க வில்லை. எனவே தான்   பெருச்சாலியை வலையில் சிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில், கேமராவை பொருத்தி உள்ளார். அந்த பெண்ணின் திட்டத்திற்கு ஏற்ப, வசமாக வலையில் சிக்கி உள்ளார் சுப்பிரமணி. எதிர்பார்த்ததை போலவே தனது காம லீலைகளை, அந்த பெண் அறைக்குள் நுழைந்த உடனே அரங்கேற்றி உள்ளார் அந்த   பெரிய மனிதர். வேண்டாம் என அவர் தடுத்தும் ஓடி ஓடி கட்டி அணைக்கும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சி அடைய  செய்து உள்ளது.

 

தனது மகன் மகளை விட வயதில் சிறியவரான அந்த பெண்ணை, பலவங்கப்படுத்தி தனது ஆசை வலையில் பணிய வைக்க எப்படித்தான் மனம் வருகிறதோ சுப்பிரமணியம் போன்ற தாத்தாக்களுக்கு...? இதை பணத் திமிரென்று சொல்வதா..? அல்லது அதிகார திமிரு என்று சொல்வதா..? இந்த சூழ்நிலையிலும், அந்த பெண், தைரியமாக அவரின் முகத்திரையை கிழித்து வெளிச்சத்திற்கு காண்பித்து உள்ளார். 
 
சுப்பிரமணி குறித்த மேலும் பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளது. 63 வயதான இந்த தாத்தா, இந்த கல்லூரியில் படிக்கும் பல பெண்களை கட்டி பிடிப்பதும் முத்தம் கொடுப்பதுமாக குஜாலாக வாழ்ந்து வந்துள்ளார். அங்கு பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்து உள்ளார். கட்டாயத்தின் பேரில் வேலை செய்பவர்களையும் வேலையை விட்டு தூக்கி விடுவேன் என மிரட்டல் விடுத்தது வந்துள்ளார். தற்போது, இது குறித்த புகாரை அந்த பெண் ஆதாரத்துடன் துடியலூர் மகளிர் காவல் நிலையத்தில் சமர்ப்பித்து உள்ளார். பாலியல்  லீலைகளில் கை தேர்ந்தவரான சுப்பிரமணி மீது வழக்கு  பதியப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.