என் கூட கொஞ்சம் நேரம் அட்ஜஸ்ட் பண்ணா போதும்! ஓஹோன்னு வாழலாம்.. நைட்டி டியூட்டி வந்தவரிடம் டாக்டர் சில்மிஷம்.!
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பேரா என்ற தனியார் மெடிக்கல் அகாடமியில் நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார். அகாடமி பரிந்துரையின் பேரில் நர்சிங் மாணவி நைட் டியூட்டி பயிற்சியாக அயனாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.
சென்னையில் நைட்டி டியூட்டி வந்த நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் மருத்துவமனை உரிமையாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பேரா என்ற தனியார் மெடிக்கல் அகாடமியில் நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார். அகாடமி பரிந்துரையின் பேரில் நர்சிங் மாணவி நைட் டியூட்டி பயிற்சியாக அயனாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு 10 மணியளவில் நர்சிங் மாணவி தனியார் மருத்துவமனைக்கு பணியாற்றச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க;- பீச்சில் உட்கார்ந்து கொண்டு காதலியிடம் ரொமன்ஸ்! திடீரென வந்த 3 பேர்! போலீசில் கதறிய காதலன்! நடந்தது என்ன?
அப்போது, மருத்துவமனையின் உரிமையாளர் தலைமை மருத்துவருமான விவேகானந்தன் மாணவியை தனி அறைக்கு அழைத்து குடும்ப விவரங்களை கேட்டுள்ளார். பின்னர் உன்னையும், உனது குடும்பத்தையும் இனி நான் பார்த்துக் கொள்கிறேன். மருத்துவமனையிலேயே உயர்ந்த சம்பளத்தில் வேலைக்கு சேர்த்துக்கொள்கிறேன் எனக்கூறி மாணவியின் கையைப் பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றள்ளார்.
இதனால், பதறிப்போன மாணவி கையை உதறி தள்ளிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். இதேபோல், அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், பொறுமை இழந்த நர்சிங் மாணவி அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- தனியா ரூம்ல நீ மட்டும் தான் இருக்க.. வாட்ஸ் அப் வீடியோ கால்ல டிரஸ்ஸை கழற்றி காட்டுறியா கேட்ட மாணவன் அரெஸ்ட்.!