அடச்சீ.. கருமம் கருமம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை.. வீடு புகுந்து தூக்கிய போலீஸ்!
புதுக்கோட்டை மாவட்டம் சித்துபட்டியை சேர்ந்தவர் கதிரவன்(34). வெட்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். 9ம் வகுப்பு பயிலும் தனது 14 வயது மகளுக்கு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி இல்லாத நேரத்தில் பெற்ற மகள் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே 9ம் வகுப்பு படித்து வந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் சித்துபட்டியை சேர்ந்தவர் கதிரவன்(34). வெட்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். 9ம் வகுப்பு பயிலும் தனது 14 வயது மகளுக்கு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி இல்லாத நேரத்தில் பெற்ற மகள் என்று கூட பாராமல் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அம்மாவுடன் கள்ளத்தொடர்பு.. கைவிட மறுத்த ஓனர்! ஊழியர் செய்த காரியம்.!
இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இந்நிலையில், தனது தந்தை செய்த சம்பவம் தொடர்பாக தனது பள்ளி ஆசிரியரிடம் மாணவி கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கதிரவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- விடுதியில் மருத்துவ மாணவி தற்கொலை! சிக்கிய கடிதம்! அவங்க 3 பேரும் தான்! அவரு பாலியல் ரீதியாக இப்படி செய்தாரு.!