நடுரோட்டில் பள்ளிச் சிறுமியின் ஆடைகளைக் களைந்து அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலம் சஹர்சா நகரில் நடுரோட்டில் பள்ளிச் சிறுமியை 3 நபர்கள் மானபங்கப்படுத்துவதும் அத்துமீறுவதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அந்த வீடியோவில் சைக்கிளில் செல்லும் சிறுமியிடம் 3 பேர் கொண்ட கும்பல் சாலையின் ஓரம் தடுத்து நிறுத்துகிறது. பிறகு அந்த குழுவில் ஒருவர் அவளைக் காப்பாற்ற முயற்சிக்கம் போது மற்றொருவர் அந்த சிறுமியின் சில்மிஷத்தில் ஈடுபடுகிறார். கும்பலில் சிலர் அந்த சிறுமியின் துப்பட்டாவை இழுத்து பறிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவரிடம் தவறாக நடக்க முயற்சிப்பது போன்று இந்த வீடியோவில் உள்ளது.

 

இது தொடர்பாக டிஎஸ்பி பிரபாகர் ரிவாரி கூறுகையில் ஒரு பள்ளி மாணவியிடம் அவரது ஆண் நண்பர்கள் சிலர் தவறாக நடக்க முற்சித்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் குறித்து அடையாளம் தெரிந்து உள்ளது.  இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.