ஆசைவார்த்தை கூறி கற்பழித்ததால் பிளஸ்-2 மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை தத்து கொடுத்ததால் இந்த விவகாரம் வெளிவந்து அந்த மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஆசைவார்த்தை கூறி கற்பழித்ததால் பிளஸ்-2 மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை தத்து கொடுத்ததால் இந்த விவகாரம் வெளிவந்து அந்த மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கு, சக மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. மாணவன் புத்தகம் வாங்குவதாக கூறி, அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி உல்லாசமாக இருந்ததால் சிறுமி கர்ப்பமடைந்தார்.

இந்நிலையில் சிறுமியின் சகோதரி பிரசவத்திற்காக திருப்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவருடன் உதவிக்கு வந்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அதே மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால், சிறுமியில் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். 

மேலும் சிறுமியின் உடல்நிலை மோசமாக இருந்ததால், பிரசவம் பார்க்குமாறு அவரது தந்தை மருத்துவமனையில் உள்ள மருத்துவரிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து கடந்த மாதம் 19ம் தேதி நடந்த பிரசவத்தில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதே மருத்துவமனையில் செல்வி என்பவர் நர்ஸாக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாகம் பிரியாள் என்பவருக்கு குழந்தை இல்லை. எனவே செல்வி, சிறுமியின் தந்தையிடம் கூறி, பாகம்பிரியாளிடம் குழந்தையை தத்து கொடுத்துள்ளார். இந்த விவகாரம் போலீசாருக்கு தெரியவந்தது. 

இதனையடுத்து, விசாரணை நடத்தியதில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான காளாப்பூரை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமியின் தந்தை, பிரசவம் பார்த்த டாக்டர், சிறுமியின் அத்தை, நர்ஸ் செல்வி (52), குழந்தையை வாங்கிய பாகம்பிரியாள் (40) ஆகிய 6 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்தார். இதில் 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மாணவிக்கு பிறந்த குழந்தையை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.