கடலூர் அருகே இளம்பெண்ணை மிரட்டி மாணவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது மேல ராதாம்பூர். இந்த பகுதியை சேர்ந்தவர் மாதவன் (17) இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கும், பக்கத்து ஊரைச் சேர்ந்த விசித்ரா(17) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். 

இந்நிலையில் மாதவன் தனது நண்பர்களான விக்னேஷ்(19), சூர்யபிரகாஷ்(21) ஆகியோரிடம் தான் விசித்ரா என்ற பெண்ணை காதலித்து வருவதாக கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதவன் தனது காதலி விசித்ராவை அங்குள்ள ஆற்றங்கரை பகுதிக்கு தனியாக அழைத்து வந்துள்ளார். அவரிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார்.

இந்த விவரம் அறிந்த மாதவனின் நண்பர்கள் விக்னேஷ், சூர்யபிரகாஷ் ஆகியோரும் ஆற்றங்கரை பகுதிக்கு விரைந்தனர். இதனையடுத்து, விசித்ராவை மிரட்டி  இருவரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். அதன்பின்பு மாதவன் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அதனைத்தொடர்ந்து விசித்ரா அழுதுகொண்டு வீட்டுக்கு சென்றார். 

இதுதொடர்பாக பெற்றோரிடம் கதறிய படி நடந்தவற்றை விசித்ரா கூறியுள்ளார். இதனையடுத்து, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசித்ராவை பலாத்காரம் செய்த 3 பேரை போக்சோ வட்டத்தில் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ், சூர்யபிரகாசும் கல்லூரியில் படித்து வருகிறார். இளம்பெண்ணை மிரட்டி மாணவர்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.