கிருஷ்ணகிரி அருகே 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் பள்ளி தாளாருக்கு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் பள்ளி தாளாருக்கு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில் பள்ளி தாளாளராக பணியாற்றி வந்தவர் குருதத். 64 வயதான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியிடம் தமிழ் எழுத்து பயிற்சி கொடுப்பதாக கூறி, சிறுமியை தனியாக அழைத்துச் சென்று ஒரு அறையில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: 72 மணிநேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது... மாஸ் காட்டும் தமிழக காவல்துறை!!
இதுகுறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் அழுதபடி கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சசிகலா, பள்ளி தாளாளர் குருதத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.
இதையும் படிங்க: ஆசைவார்த்தை கூறி சிறுவனுடன் உல்லாசம்… கர்ப்பமான கல்லூரி மாணவி போக்சோவில் கைது!!
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நீதிபதி பி.சுதா அதிரடி தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட குருதத் சிறுமியை அறைக்குள் வைத்து பூட்டியதற்காக ஒரு வருடம் மற்றும், ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஏழாண்டு ஆண்டு சிறை மற்றும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
