தெலுங்கானாவில் அரசுப் பள்ளிக்குள் வைத்து 5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தலைமை ஆசிரியர் ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தெலுங்கானாவில் அரசுப் பள்ளிக்குள் வைத்து 5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தலைமை ஆசிரியர் ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர், 7 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட 5 சிறுமிகளை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பள்ளிக்குள் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து, தலைமை ஆசிரியர் தலைமறைவாகி விட்டார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் அதிகாரிகளுடன் போலீசார் பாதிக்கபட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். பாதிக்கபட்ட 2ம் வகுப்பு சிறுமி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், 40 வயதான தலைமை ஆசிரியர் சிறுமிகளுக்கு ஆபாச படத்தை பார்க்கும்படி கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறத்தலையும் செய்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 16, 2020, 5:46 PM IST