நினைக்கும் போதெல்லாம் மிரட்டி பலாத்காரம்.. டார்ச்சர் தாங்க முடியாமல் தாயிடம் கதறிய மகள்..!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி  10-ம் வகுப்பு படித்து வந்தார்.  மாணவியின் உறவினர் நல்லமருது (37) என்பவர் வீட்டின் அருகில் வசித்து வருகிறார். 

school girl sexual harassment in Virudhunagar

பத்தாம் வகுப்பு மாணவியை அடிக்கடி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த உறவுக்கார வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி  10-ம் வகுப்பு படித்து வந்தார்.  மாணவியின் உறவினர் நல்லமருது (37) என்பவர் வீட்டின் அருகில் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான இவர் கடந்த சில வாரங்களாக வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில், தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு நல்லமருது பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். நாளுக்குநாள் நல்ல மருதுவின் தொல்லை தாங்க முடியவில்லை. இதனையடுத்து,  தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தனது தாயிடம் கதறிய படி கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய்   அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நல்லமருதுவை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios