18 வயசு முடிஞ்ச ஒருவாரத்திலேயே 32 வயது ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்துள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதே பள்ளியில் 32 வயதுடைய ஆங்கில ஆசிரியர் பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணமாகவில்லை. அதே பள்ளியில் ஒரு மாணவி 12ம் வகுப்பு முடித்துள்ளார். இந்நிலையில், அந்த மாணவி 18 வயது நிறைவடைந்து 19 வயதை எட்டினார்.
12ம் முடித்த பள்ளி மாணவியுடன் ஆசிரியர் ஓட்டம் பிடித்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்துள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதே பள்ளியில் 32 வயதுடைய ஆங்கில ஆசிரியர் பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணமாகவில்லை. அதே பள்ளியில் ஒரு மாணவி 12ம் வகுப்பு முடித்துள்ளார். இந்நிலையில், அந்த மாணவி 18 வயது நிறைவடைந்து 19 வயதை எட்டினார்.
இதையும் படிங்க;- ஐயோ என்ன காப்பாத்துங்க.. அலறிய பாமக நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!
இந்நிலையில், அந்த மாணவி தோழி ஒருவரை பார்க்க செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால், பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியில் மாணவியின் தோழியிடம் விசாரித்த போது அதே பள்ளியில் படித்து வந்த 32 வயது ஆசிரியருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
இதனை அறிந்த பெற்றோர் மகளை ஆசிரியர் கடத்தி சென்றுவிட்டதாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, மாயமான மாணவி, ஆசிரியருடன் ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களை மீட்டு போலீசார் நாகர்கோவிலுக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அழைத்து வந்தனர்.
இதையும் படிங்க;- ஒன்னு இல்ல ரெண்டு இல்ல! 41 மாணவிக்கு பாலியல் தொல்லை! எப்படி தெரியுமா? மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்
பின்னர் மாணவியின் பெற்றோரை போலீசார் வரவழைத்தனர். அப்போது மாணவி, ஆசிரியருடன் இருப்பதை பார்த்து கதறி அழுதனர். அப்போது, படிக்க வேண்டிய வயதில் திருமணம் வேண்டாம் என கூறினர். ஆனால் மாணவி ஆசிரியருடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதில் ஆசிரியரின் பெற்றோர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், தங்களது மகளை ஆசிரியருக்கு திருமணம் செய்து வைப்பதாக ஒப்புக்கொண்டனர். இதுதொடர்பாக இருவீட்டாரும் போலீசாரிடம் எழுத்துமூலமாக கடிதம் எழுதி கொடுத்தனர். திருமணம் நடக்கும் வரை மகள் எங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அதற்கு மாணவியும், ஆசிரியரும் சம்மதம் தெரிவித்தார்கள். இதனையடுத்து மாணவி தனது பெற்றோருடன் சென்றார். ஆசிரியருடன் மாணவியுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.