பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய இளைஞரை போலீசார் போச்சோ சட்டத்தின் கைது செய்துள்ளனர். 

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மறைவதற்குள் அடுத்து ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவரது மகன் ஷேக்பீர் என்கிற யாசிர் (20). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியும் காதலிப்பதாக ஆசை வார்ததை கூறி பழகி வந்துள்ளார்.  

இதையும் படிங்க;- பிழைக்க வந்த நடிகர் ரஜினிகாந்த் வண்ணாரப்பேட்டைக்கு வருவாரா? இஸ்லாமியர்கள் மத்தியில் கொந்தளித்த வேல்முருகன்..!

இதற்கிடையில் அந்த மாணவியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அடிக்கடி தனிமையில் இருக்கும் போது இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர். இதனால் அந்த மாணவி 4 மாதம் கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து தான் கர்ப்பமாக உள்ளதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு யாசிரிடம் அந்த மாணவி கூறியுள்ளார். 

ஆனால், யாசிர் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளுமாறு தொரந்ததரவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யாசின் வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கதறியபடி கூறியுள்ளார். பின்னர், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதையும் படிங்க;- உல்லாசத்துக்கு இடையூறு... சிறுமியை கட்டையால் தாக்கி மாடிப்படியில் இருந்து கீழே தள்ளி கொன்ற கொடூர பெற்றோர்..!

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் யாசிர் மீது போக்சோ, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் தேடுவதை அறிந்த யாசிர் தலைமறைவானார். இந்நிலையில் போலீசாருக்கு யாசிர் வால்பாறை ரங்கசமுத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று யாசிரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் பொள்ளாச்சியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.