அண்ணியை கழுத்தறுத்து படுகொலை செய்த கொழுந்தன்.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்..!
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (45). இவர் சலூன் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சாந்தி (40). இவர் பாஜக மகளிர் அணி சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
சேலத்தில் பாஜக மகளிர் அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கழுத்தை அறுத்து கொலை செய்த கொழுந்தனை தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (45). இவர் சலூன் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சாந்தி (40). இவர் பாஜக மகளிர் அணி சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். கண்ணனின் தம்பி கர்ணன் (எ) கருணாநிதி (40). இவர் அண்ணனின் சலூன் கடையில் வேலை செய்து வந்தார். இவரது மகள் ராஜேஸ்வரி (19). அன்னதானப்பட்டியைச் சேர்ந்த மோகன்லாலை காதலித்துள்ளார்.
இதையும் படிங்க;- நான் தூங்கிட்டு இருக்கும் போது என்ன நாலு பேரு வந்து நாசம் செஞ்சுட்டானுங்க.. போலீஸ் ஸ்டேசனில் கதறிய பெண்.!
இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 13ம் தேதி ராஜேஸ்வரியும், மோகன்லாலும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு போலீசில் தஞ்சமடைந்தனர். இருதரப்பு பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராஜேஸ்வரி பெற்றோருடன் செல்லாமல் காதலனுடன் செல்வதாக கூறியதை அடுத்து அவரது விருப்பப்படியே போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ராஜேஸ்வரி அவரது காதலன் மோகன்லால் நேற்று இரவு கண்ணனின் வீட்டிற்கு வந்துள்ளனர். தனது மகள் அண்ணனின் வீட்டிற்கு வந்ததை அறிந்த கருணாநிதி ஆத்திரமடைந்தார். அண்ணன் வீட்டிற்கு வந்த தம்பி கருணாநிதி என்னுடைய மகள் ராஜேஸ்வரி காதல் திருமணம் செய்ததற்கு அண்ணி சாந்தி தான் காரணம் என்று கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க;- அம்மா உணவகத்தில் அதிர்ச்சி! சாம்பார் சாதத்தில் அரணை.. சாப்பிட்டவரின் நிலை என்ன?
தகராறு முற்றிய நிலையில், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து அண்ணி என்று கூட பாராமல் சாந்தியின் கழுத்தை அறுத்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சாந்தி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கருணாநிதியை தேடி வருகின்றனர்.