புதுக்கோட்டையில் பட்டப்பகலில் பிரபல ரவுடி சுரேஷ் பாண்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

புதுக்கோட்டையில் பட்டப்பகலில் பிரபல ரவுடி சுரேஷ் பாண்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் பாண்டி. இவர் மீது புதுக்கோட்டை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்நிலையில், குற்ற வழக்கில் சிறை சென்று கடந்த மாதம் முன்பு தான் சுரேஷ் பாண்டி ஜாமீன் வெளியே வந்துள்ளார். 

இந்நிலையில் இன்று காலை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் அருகே சுரேஷ் பாண்டி மற்றும் அவரது நண்பர் ஆனந்தன் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சுரேஷ் பாண்டியை சரமாரியாக வெட்டினர். இதையடுத்து ரத்து வெள்ளத்தில் சரிந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் அவரது நண்பர் ஆனந்தனையும் வெட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுரேஷ் பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த அவரது நண்பரை போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்று இருக்கலாம் என்று கூறியுள்ளனர். பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.