ஐஐடி பேராசிரியர் போல் நடிப்பு! டாக்டரை ஏமாற்றி 2வதாக மணந்த சாலை ஓர வியாபாரி வரதட்சணை வழக்கில் கைது
சென்னையில் ஐஐடி பேராசிரியர் போல் நடத்தி, பெண் டாக்டரை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த சாலை ஓர வியாபாரி வரதட்சணை வழக்கில் கைது செய்யப்பட்டார்
சென்னையில் ஐஐடி பேராசிரியர் போல் நடத்தி, பெண் டாக்டரை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த சாலை ஓர வியாபாரி வரதட்சணை வழக்கில் கைது செய்யப்பட்டார்
சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் வி. பிரபாகரன்(வயது34). தனது சகோதரர்களுடன் சேர்ந்து ஜாபர்கான்பேட்டை பெரியார் தெருவில் சிறிய ஹோட்டல் நடத்தி வருகிறார். இது தவிர அசோக் நகரில் சாலை ஓர டிபன் கடையும் பிரபாகரன் நடத்தி வருகிறார்.
40 கோடிக்காக மனைவியை கொன்ற டாக்டர்... கள்ளக் காதலிக்கு போன் போட்டு சொன்ன பயங்கரம்.
இந்நிலையில் பிரபாகரனுக்கு ஏற்கெனவே 2019ம் ஆண்டு திருமணமாகி இருந்தது. முதல் மனையுடன் ஏற்பட்ட சிக்கலால், அவரிடம் வரதட்சணையாக வாங்கிய பணத்தையும், நகையையும் திரும்ப வழங்கவேண்டியதிருந்ததால், பெரும் கடனில் சிக்கித் தவித்தார்.
அப்போது 2020ம் ஆண்டில் கொரோனா காலத்தில் சென்னையைச் சேர்ந்த சண்முக மயூரி என்பவரை 2-வதாக பிரபாகரன் திருமணம் செய்தார். சண்முக மயூரி சென்னையில் மருத்துவராக பயிற்சிஎடுத்து வருகிறார்.
திருமணத்துக்குமுன் மயூரியிடம், தான் ஐஐடி கல்வி நிறுவனத்தில் பயோடெக் பிரிவில் பேராசிரியராக இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது மயூரி குடும்பத்தினர் மும்பையில் வசித்ததால், பிரபாகரன் பேச்சை நம்பி திருமணத்துக்கு சம்மதித்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை..வாயில் ஆசிட் ஊத்திய கொடூரன் வெறிச்செயல் !
இதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு மயூரியை, பிரபாகரன் 2-வதாகத் திருமணம் செய்தார். பிரபாகரனுக்கு வரதட்சணையாக ரூ.15 லட்சம் ரொக்கம், ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள், 110 சவரன் நகைகள், ஒரு கார் ஆகியவற்றை வரதட்சணையாக மயூரி குடும்பத்தினர் கொடுத்தனர்.
திருமணம் முடிந்தபின் கடந்த 2 ஆண்டுகளாக காலையில் வெளியே செல்லும் பிரபாகரன் மாலையில்தான் வீடு திரும்புவார். இதனால் தினசரி ஐஐடி கல்லூரிக்கு வேலைக்கு செல்வதுபோல் நடித்து, மனைவியை ஏமாற்றி வந்துள்ளார்
பிரபாகரன் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே, தன்னுடன் ஏன் நேரம் செலவிடுவதில்லை, ஏன் வெளியேஅழைத்துச் செல்வதில்லை என பிரபாகரனிடம் கேட்டு, மயூரி சண்டையிட்டுள்ளார். உண்மை தெரிந்துவிடும் என்று அஞ்சிய பிரபாகரன், மயூரியை அடித்து உதைத்துள்ளார்.
மழைக்கு ஒதுங்கிய பெண்ணை கட்டி வைத்து 3 மணி நேரம் உடலுறவு.. சித்திரவதை.. சைகோ இளைஞன் கைது.
இதுகுறித்து பிரபாகரனின் தாயிடமும், மயூரி தெரிவித்தார். ஆனால், அவர்களோ, ஐஐடியி்ல் பிசியான பேராசிரியர் என்பதால், இப்படித்தான் தாமதமாக வீட்டுக்கு வருவார் எனக் கூறி சமாளித்தனர்.
ஆனால், மயூரிக்கு சந்தேகம் வரவே தனது சகோதரரை வரவழைத்து, ஐஐடிகல்லூரிக்குச் சென்று, பிரபாகரன் குறித்து மயூரி விசாரித்துள்ளார். அப்போதுதான் மயூரிக்கு உண்மை நிலவரம் தெரியவந்தது. பிரபாகரன் ஐஐடி கல்லூரியில் பேராசிரியர் இல்லை, சாலை ஓரக் ஹோட்டல் நடத்துகிறார் என்பதும், ஹோட்டலை பெரிதாக்க, தனது நகைகளை அடகு வைத்துள்ளார், பணத்தை செலவிட்டுள்ளார் எனத் தெரியவந்தது.
இதையடுத்து, அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரபாகரன் மீது மயூரி புகார் அளித்தார். இந்தப் புகாரையடுத்து, பிரபாகரனை விசாரித்த போலீஸார், அவரைக் கைதுசெய்தனர்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில் “ 2019ம் ஆண்டே பிரபாகரனுக்கு திருமணம் நடந்துள்ளது. அந்த திருமணத்தில் ஏராளமான கடன் பட்டதால் வேறு திருமணம் செய்து கடனை அடைக்க முடிவு செய்தார் திருமணத்தை மறைத்து ஐஐடி பேராசிரியர் போல் நடத்து, மயூரியைத் திருமணம் செய்தார்.
திருமணத்தின் போது 110 சவரன் நகை, ரூ15 லட்சம் ரொக்கம், ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வரதட்சணையாக மயூரி குடும்பத்தினர் வழங்கினர். பிரபாகரனுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. மயூரி அளித்த புகாரில் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார், இன்னும் அவரின் குடும்பத்தார் கைது செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தனர்.