மழைக்கு ஒதுங்கிய பெண்ணை கட்டி வைத்து 3 மணி நேரம் உடலுறவு.. சித்திரவதை.. சைகோ இளைஞன் கைது.
மழைக்கு ஒதுங்கிய பெண்ணை இழுத்துச் சென்று கட்டிவைத்து மர்ம நபர் ஒருவர் மூன்று மணி நேரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பெண் போலீசிடம் புகார் கொடுக்க சென்ற போது போலீசார் புகார் வாங்க மறுத்ததுடன் அந்தப் பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து அனுப்பி வைக்க முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மழைக்கு ஒதுங்கிய பெண்ணை இழுத்துச் சென்று கட்டிவைத்து மர்ம நபர் ஒருவர் மூன்று மணி நேரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பெண் போலீசிடம் புகார் கொடுக்க சென்ற போது போலீசார் புகார் வாங்க மறுத்ததுடன் அந்தப் பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து அனுப்பி வைக்க முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, திரும்பிய பக்கமெல்லாம் குழந்தைகள் முதல் குமரிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.
இதை தடுக்க எத்தனையோ நடவடிக்கை எடுத்தோம் குற்றங்கள் குறைந்தபாடில்லை, காதலிப்பது போல நடித்து கற்பழித்து மோசடி செய்வது, காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்து கொண்டு பின்னர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது என எண்ணற்ற கொடுமைகளை பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் மேற்கு வங்க மாநிலத்தில் மழைக்கு ஒதுங்கி நின்ற இளம்பெண்ணை ஒரு நபர் கட்டி வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ள கொடுமை நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஜூன் 12ஆம் தேதி கொல்கத்தாவில் மழை பெய்து கொண்டிருந்தது, அப்போது இளம்பெண் ஒருவர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மழை வலுவாக பெய்யவே அந்தப் பெண் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு கொட்டகையின் கீழ் நின்று கொண்டிருந்தார், ஏற்கனவே அங்கு நின்றிருந்த ஒரு நபர் அந்தப் பெண்ணை ரயில் நிலையம் அருகே ஒரு தனிமையான இடத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.
அந்த நபரிடம் இருந்து தப்பிக்க எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை, பின்னர் அந்த நபர் அந்தப் பெண்ணை கட்டிவைத்து மூன்று மணி நேரம் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து எப்படியோ தப்பித்து வந்த அந்தப் பெண் கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார், கடந்த வியாழக்கிழமை உடல் நலம் தேறிய அவர் நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறினார்.
பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றார், ஆனால் அப்போது அங்கு இருந்த போலீசார் புகாரை ஏற்க மறுத்ததுடன், தயவு செய்து நீங்கள் கிளம்புங்கள் என 1000 ரூபாய் எடுத்துக் கொடுத்து அந்தப் பெண்ணை அவமரியாதை செய்துள்ளனர். பின்னர் இதுகுறித்து அந்த பெண் காவல் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் தெரிவித்துள்ளதாவது பாதிக்கப்பட்ட பெண் தல்பட்டி பகுதியை ஒட்டியுள்ள கால்வாய் ஓரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தார், அப்போது திடீரென வந்த ஒரு இளைஞன் அந்த பெண்ணை பிளேடை காட்டி மிரட்டி ஒதுக்குப்புறமாக இழுத்துச் சென்றார்.
சத்தமிட்டால் பிளேடால் கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டியுள்ளார், இதனையடுத்து அந்தப் பெண்ணை மூன்று மணிநேரம் பாலியல் சித்திரவதை செய்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் ஒரு சில மணி நேரங்களில் வேன் மற்றும் சைக்கிள் ரிக்ஸா ஓட்டும்தொழிலாளியான மணிக்தலா பகுதியைச் சேர்ந்த ஹாஸ்டர் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அந்த நபரை அடையாளம் காட்டியதுடன் தான் அணிந்திருந்த தங்க நகைகளை அந்த நபர் பறித்ததாகவும் குற்றம்சாட்டினார். இந்நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.