பெண்ணின் டிரஸ்ஸை ரவுடி அறிவழகன் கிழித்த ஆத்திரத்தில், வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த ரவுடி அறிவழனை, குடும்பத்தின் கண் முன்னால்  2 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் பீஸ் பீஸாக  வெட்டி சாய்த்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றது.

திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ரவுடி அறிவழகன்  ரவுடி பல்புகுமாரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி. இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு  சாப்பிட்டு கொண்டிருந்த போது, ஆயுதங்களுடன் திடீரென உள்ளே புகுந்த 2 பேர், அறிவழகன் வெட்ட பாய்ந்தனர் அப்போது  அங்கிருந்து தப்பி ஓட முயன்றார் அனால், வெறித்தனமாக அரிவாளை வீசியதும் சுருண்டு விழுந்த ரவுடி அறிவழகனை செதில் செதிலாக வெட்டினர்.  

இதில் அறிவழகனின் கை, கால்கள், தலை, முகம் என எல்லா இடங்களிலுமே அரிவாள் வெட்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இமைக்கும் நேரத்தில் இந்த படுகொலையை செய்துவிட்டு 2 பேரும் தப்பி விட்டனர். தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 

போலீசாரின் விசாரணையில் இது முன்விரோதத்தில் நடந்த கொலை என்பது தெரியவந்தது. சில நாட்களுக்கு முன்பு அறிவழகனுக்கு ஒரு பெண்ணுடன் தகராறு வந்துள்ளது. அப்போது, அந்த பெண்ணின் டிரஸ்ஸை அறிவழகன் கிழித்துவிட்டதக சொல்லப்படுகிறது. இதனால் அந்த பெண்ணின் மகன்களுக்கும், அறிவழகனுக்கும் அடிக்கடி பிரச்சனை இருந்துள்ளது.

இதனால் ரவுடியை போட்டுத்தள்ள நேரம் பார்த்துக்கொண்டிருந்த இரண்டுபேரும் வீடு புகுந்து வெறித்தனமாக வெட்டியுள்ளார்.  ஆனால் கொன்றவர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால் தப்பிச் சென்ற அந்த 2 பேரையும் பிடிக்க ஒரு தனிப்படையை போலீசார் அமைத்து தேடி வருகின்றனர். ரவுடி கொல்லப்பட்டதால்  மாட்டாங்குப்பம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது, இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.