திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சின்னக்குளம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வானன் சமயபுரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் லால்குடி அருகே உள்ள கோதண்ட குறிச்சியை சேர்ந்த ஒரு நர்சிங் மாணவி மீராவும் காதலித்து வந்தனர். இவர்கள்  இருவரும் அடிக்கடி தனியே சந்தித்து  உல்லாசமாக இருந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்வானன் தனது காதலி மீராவை சந்திக்க விரும்பினார். உடனே செல்போனில் தொடர்பு கொண்டு தனது விருப்பத்தை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மீரா,  தமிழ்வாணன் கூறிய இடத்திற்கு வந்தார்.

இருவரும் மோட்டார்சைக்கிளில் சிறுகனூர் ரோட்டில் குமுளூர் என்ற இடத்திற்கு சென்றனர். அங்கு ஒரு காட்டுப்பகுதியில் இருவரும் தனிமையில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

காதல் ஜோடி இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருப்பதை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் பார்த்துள்ளது. போதையில் இருந்த அந்த 4 பேரும் மீராவை கற்பழிக்க முய்ன்றனர். இதனை தமிழ்வாணன் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் குத்தியது..

பின்னர் மீராவை தூக்கிச் சென்ற அந்த கும்பல் கபாலியல் பலாத்காரம் செய்தது. ஒரு கட்டத்தில் மீரா காப்பாற்றுங்கள்,. காப்பாற்றுங்கள் என கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக ரோட்டில் சென்றவர்கள் ஓடி வந்தனர். இதைப்பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பியது. அதன் பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் தமிழ்வாணனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்வாணனின் காதலியிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரின் அங்க அடையாளங்கள், பைக் நம்பர் அடையாளம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன்படி 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்