இராமநாதபுரத்தில் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த துணி வியாபாரி ஜெயராமனை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரத்தில் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த துணி வியாபாரி ஜெயராமனை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அடுத்த ராமசாமிப்பட்டியைச் சேர்ந்த ஜெயராம் கமுதி செட்டியார் தெருவில் உள்ள தனது வீட்டில் துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டு வருகிறார். 

இன்று அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்த ஜெயராமனை வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்தனர். இதில் பலத்த காயமடைந்த ஜெயராமன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

தகவல் அறிந்து வந்த கமுதி காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொழில் போட்டி காரணமாக கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.