பாதாள உலக நாயகன் சோட்டாராஜனின் மருமகள் பிரியதர்ஷ்னி நிகால்கே மீது புனே காவல்துறை 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறது.
T.Balamurukan
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
பாதாள உலக நாயகன் சோட்டாராஜனின் மருமகள் பிரியதர்ஷ்னி நிகால்கே மீது புனே காவல்துறை 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறது.
மகாராஷ்ட்ரா மாநிலம் புனே காவல்துறை சோட்டாராஜனின் மருமகள் மீது மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது. இதில் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.மற்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

இதற்கிடையில், சிபிஐ சோட்டா ராஜன் மீது கொலை,கொலை முயற்சி,மிரட்டி பணம் பறித்தல் ஆகிய புதிய நான்கு வழக்குகளை பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்பித்தது.அதன் அடிப்படையில் இந்தோனேசியாவில் இருந்த சோட்டாவை நாடுகடத்தி இந்தியா கொண்டு வந்து ,டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைத்திருக்கிறது போலீஸ்.