சிவகாசி அருகே நாரணாபுரம் பிள்ளையார் கோவில்  தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(36). இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மகேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். 

சிவகாசியில் தனியார் பேருந்து ஓட்டுநர் பீர் பாட்டிலால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சிவகாசி அருகே நாரணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(36). இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மகேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையில், தனியார் கண் மருத்துவமனையின் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கட்டிடத்தின் அருகே பிணமாகசடலமாக கிடந்தார். 

இதையும் படிங்க: கள்ளக்காதலியுடன் உல்லாசம்! வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பி இதுபோல சந்தோசம் கொடுக்க முடியுமா கேட்ட கணவர்!

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் 4 பேர் கொண்ட கும்பலுடன் சுரேஷ் மது அருந்தியதாகவும் அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை பீர் பாட்டிலால் கழுத்து, முகம், வயிற்றில் குத்திவிட்டு தப்பியதும் தெரியவந்தது.

இதையும் படிங்க: உல்லாசத்துக்கு வர மறுத்த கள்ளக்காதலி! ஆத்திரத்தில் ஆபாச வீடியோவை வெளியிட்ட வங்கி ஊழியர்! அதிர்ச்சியில் கணவர்.!

இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது தெரியவந்தது. போலீசார் தனிப்படை அமைத்து தப்பியோடிய கொலையாளிகளை வலை வீசித் தேடி வருகின்றனர்.