நீ என்ன தற்கொலை செய்வது.. நானே உன்னை எரித்து விடுகிறேன்.. புல் மப்பில் கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன்.!

புல் மப்பில் இருந்த கணவர்  நீ என்ன தற்கொலை செய்து கொள்வது, நானே உன்னை எரித்து விடுகிறேன் என கூறி வீட்டில் இருந்த மண்ணென்ணெயை எடுத்து நந்தினி மேல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு மகனை தூக்கி சென்றுள்ளார். 

pregnant wife murder...Husband Arrest in Chengalpattu tvk

வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்த கணவரை கண்டித்ததால் கர்ப்பிணி மனைவி என்று கூட பாராமல் உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (28). பெயிண்டர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளான். நான்கு மாத கர்ப்பிணியாக நந்தினி இருந்து வந்தார். 

இதையும் படிங்க;- பீச்சில் ரொமன்ஸ்! பாறை இடுக்கில் விழுந்த காதலி! அப்படியே தவிக்கவிட்டு சென்ற காதலன்! இறுதியில் நடந்தது என்ன?

pregnant wife murder...Husband Arrest in Chengalpattu tvk

இந்நிலையில், ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் பகலிலேயே குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நீ குடித்துவிட்டு வந்தால் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என கணவரை மனைவி மிரட்டி உள்ளார்.

pregnant wife murder...Husband Arrest in Chengalpattu tvk

இதையும் படிங்க;-  மருத்துவ மாணவி தற்கொலை.. பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்.. துன்புறுத்திய சீனியர்கள்.. அதிரடி ஆக்ஷன்.!

புல் மப்பில் இருந்த கணவர்  நீ என்ன தற்கொலை செய்து கொள்வது, நானே உன்னை எரித்து விடுகிறேன் என கூறி வீட்டில் இருந்த மண்ணென்ணெயை எடுத்து நந்தினி மேல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு மகனை தூக்கி சென்றுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது தீக்காயத்தால் துடித்த அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios