ஆண் பிள்ளைகளை பெற்ற அப்பாக்கள் நடிகர் பிரசன்னா சொல்வதை செய்தால் போதும் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்காரம் போன்றது எதுவுமே நடக்காது என நம்பலாம்.

பொள்ளாச்சியில் 200 அப்பாவி பெண்களை 20 பேர் கொண்ட பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ  மிரட்டி திரும்பாத திரும்ப பாலியல் வன்கொடுமை செய்த  இந்த சம்பவம்  நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இது தேர்தல் நேரம் என்பதால் பொள்ளாச்சி விவகாரத்தை யாருமே கண்டுகொள்ளவில்லை, எல்லோரும் தேர்தல் வேளைகளில் பிசியாக இருக்கிறார்கள் என்று நடிகர் பிரசன்னா சரியாக  ட்வீட் போட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து, "ஒரு பெண்ணை மரியாதையுடன் எப்படி நடத்த வேண்டும் என்று என் மகனுக்கு கற்றுக் கொடுப்பேன்" என்று வாக்குறுதி அளிக்கிறேன் என்ற வாசகத்தை ட்விட்டர் ப்ரொஃபைல் பிக்சராக வைத்துள்ளார் பிரசன்னா.  ஒரு பெண்ணை எப்படி நடத்த வேண்டும் என்று  பிள்ளைகளுக்கு பெற்றோர் கண்டிப்பாக சொல்லிக்கொடுக்கணும். இதை நமது வீட்டிலிருந்து துவங்கப்பட வேண்டும். 

பிரசன்னாவின் இந்த டீவீட்டைப் பார்த்து "இந்த மாதிரி ஒரு சூழலை எப்படி எதிர்கொள்வது என்று என் மகளுக்கு நான் கற்றுத் தருவேன்" என்று வாக்குறுதி அளிக்கிறேன் என  கமெண்ட் போட்டுள்ளார்.