15 வயது சிறுமிக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மாணவியை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். 

பொள்ளாச்சியில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை 6 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மாணவியை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். 

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதுகுறித்து கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, சிறுமி வசிக்கும் பகுதியை சேர்ந்த சிலர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, இவ்வழக்கு நேற்று பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான 6 பேரை மகளிர் போலீசார் இன்று பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.