‘பெருசுக்கு பல்லு இல்லேன்னாலும் வில்லு இன்னமும் கெட்டியாதாண்டி இருக்குது!’ அந்த பெரிய கட்சியின் சீனியர் மோஸ்ட் மனிதரின் அக்குறும்புகளைப் பார்த்தபின் வந்து விழும் கமெண்டுகள் இந்த ரகமாய்தான் இருக்கும். தமிழகத்தை மாற்றி மாற்றி ஆளும் கழகங்களில் ஒரு கழகத்தை சேர்ந்தவர் அவர். 

தலைநகரின் சமுத்திர ஏரியாவில் தனி ராஜ்ஜியம் படைத்தவர். இளமை துடுக்கோடு இருந்த காலத்தில் ஏரியாவில் இவர் வுடாத ரவுசே கிடையாது. தங்கள் கட்சி ஆளுங்கட்சியாக இருக்கும்போதே இவர் மீது வழக்குகள் பதிவாகுமென்றால் மனிதர் எந்தளவுக்கு தரையிறங்கி தகர அடி அடிப்பாரென்று யூகித்துக் கொள்ளுங்கள். கண்டிப்புக்கு பெயர் போனதாய் இருந்த அந்த கட்சியின் தலைமையின் கவனத்துக்கு இவர் பற்றிய புகார்கள் அடிக்கடி போகும். 

ஆனாலும் கூட இவரது களப்பணிக்காகவே கட்டங்கட்டாமல் காப்பாற்றப்பட்டு வந்தார். இதை புரிந்து வைத்திருந்ததால் மனிதர் கொஞ்சம் துளிர்விட்டுத்தான் திரிந்தார் ஏரியாவில். கட்சியின் தலைமையை தவிர வேறு யாருக்கும் கட்டுப்படாத இந்த மனிதரின் பெரிய சறுக்கல் சங்கதி என்னவென்றால் ’அது’தான், அதேதான். 

சரக்கு மாதுமாகதான் நகரும் இவருடைய பெரும்பாலான வார நாட்கள். அதிலும் மகளிர் அணியின் சீனியர் பெண்கள் வந்தால் மனிதர் ஓவராய்தான் வாலாட்டிப் பார்ப்பார். அதிலும் அந்தரங்க விஷயத்தை இலை மறை  காயாக சொல்லாமல், வெளிப்படையாக போட்டுடைத்து பேசுவதுதான் இவரது ஸ்டைல். 

இவர் இப்படி பச்சையாக போட்டுடைக்கும் போது அந்தப் பெண்கள் முகத்தை கைகளால் மூடியபடியும், வாயைப் பொத்தியபடியும் சிரித்தபடி ஓடுவார்கள். கழகத்தின் முக்கிய நிகழ்வு நேரங்களில்ட...காரில் முன்பக்க சீட்டில் அமர்ந்து வெற்றிலை போட்டபடி இருப்பார் இவர். 

அவரது காரை சுற்றி மகளிரணியினர் நிற்பார்கள். சிலர் உரிமையாக அவரது கார் கதவின் இறக்கப்பட்ட கண்ணாடி பகுதியில் கை வைத்தபடி பேசிக் கொண்டிருப்பார்கள். பொத்தாம் பொதுவாகவும், கட்சி பதவிகள் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருப்பவர் திடீரென ஒரு பெண்ணை கூப்பிட்டு, ‘ஏன் பாப்பா மாமனை கண்டுக்கவே மாட்டேங்குற! ஒன்ன பாக்கச்சொல்லோ மனசு கெடந்து பிசையுது. மனசு மட்டுமா, கை காலும் மதமதத்துப் போவுது. 

இப்ப கூட பாரு, ஒங்கூட பேசிட்டு இருக்கசொல்லேயே என் வேட்டி கூடாரம் போடுது. இன்னா பாரு, இன்னா பாரு வேட்டி கூடாரம் போடுது’ என்று தயக்கமே இல்லாமல் க்ரீன் வார்த்தைகளில் போட்டுத் தாக்குவார். அந்தப் பெண்மணியோ ’போங்க தலீவரே ஒங்களுக்கு எப்பா பாரு வெளாட்டுதான்.’ என்று சிணுங்கியபடி ஓடுவார். 

இப்படி பேசிப்பேசியே அண்ணன் பிராக்கெட் செய்த பைங்கிளிகள் ஏராளம், தாராளம். இப்போதெல்லாம் அவருக்கு கை, கால் நடுக்கம் வருவதற்கு காரணமே இளமையில் தொட்ட பழக்கம் இன்று வரை நீடிப்பதுதான்! என்பார்கள் விபரமறிந்த கட்சி நிர்வாகிகள். 

கட்சி பிளவுகளையும் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகளையும் சந்தித்து அந்தலி சிந்தலியாகிப் போன நேரத்திலும் கூட இவர் தன் லீலைகளை நிறுத்தவேயில்லை. தலை தப்புமா? எனும் அளவில் முக்கிய பஞ்சாயத்துகள் போயிட்டிருக்கும் கட்சி அலுவலகத்தில். அப்போது கூட தனக்கு விருப்பமான பெண் நிர்வாகியை பார்த்து ’இந்த கூடார பிரச்னைக்கு ஒரு தீர்வே கிடையாதா?’ என்பார் வேட்டியை காண்பித்து. 

ஹும்! சிலருக்கு உடம்பில் மச்சமென்றால் இந்த அங்கிளுக்கு மச்சத்தில்தான் ஒடம்பே!