சென்னை பள்ளிக்கரணை அருகே துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில், பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து நிற்பார்கள். அவ்வழியாக வருவோர் போவோரையெல்லாம் திருநங்கைகள் விபச்சாரத்துக்கு  அழைத்து வருவார்கள் . இது குறித்து அப்பகுதி பொது  மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணி புரியும் சத்யராஜ் என்பவர், பணி நேரத்தில் யூனிஃபார்மில் திருநங்கையுடன் உல்லாசமாக இருக்க முயன்றுள்ளார். அப்பகுதியில் இருந்த புதருக்குள் திருநங்கை ஒருவரை அழைத்துச் சென்ற சத்யராஜ் அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

திருநங்கைகளின் அத்துமீறல்கள் அந்தப் பகுதியில் அதிகமாக நடப்பதால் பொதுமக்கள் ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்தனர்.அதைத் தட்டிக் கேட்க வேண்டிய காவலரே, இவ்வாறு செய்ததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் புதருக்குள் சென்று சத்தியராஜைப் பிடிக்க முயன்றனர். 

பொதுமக்கள் விரட்டுவதைப் பார்த்த சத்யராஜ் அலறி அடித்துக் கொண்டு சேற்றில் விழுந்து எழுந்து ஓடினார். விடாமல் துரத்திய மக்கள், அவரைப் பிடித்து இழுத்து வந்து சாலையில் நிறுத்தினர்.

சத்தியராஜின் வாகனத்தை உதைத்து தள்ளி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார் காவலர் சத்தியராஜ் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.