பெத்த அம்மாவே நிர்வாணமா ஆட சொன்னாங்க..  என கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மீடியா முன்பு கதறிய பெண் இன்ஸ்பெக்டரின் மகள், இந்த நாளை போலீசாரிடம் இது சம்பந்தமாக மன்னிப்பு கேட்க போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்திக்க அவர் முடிவு செய்துள்ளார். 

சென்னை, கோட்டூர்புரம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ஆர்.விஜயலட்சுமி மீது அவரது பெற்ற மகள், சென்னையில் செய்தியாளர்கலை சந்தித்த அவர்; என்அம்மா இன்ஸ்பெக்டரா இருக்காங்க. என்னுடைய அம்மாவும், அப்பாவும் என்னை வற்புறுத்தி ஒரு வருஷமாக துபாய் பார்ல் டான்ஸ் ஆட வைத்து பணம் சம்பாதித்தார்கள். என் அம்மா என்னை கொடுமை படுத்தியதால், அங்கிருந்து வெளியேறிய நான் என் அண்ணன் வீட்டில் இருந்தேன். அங்கேயும் அடியாட்களுடன் வந்த அவர்கள் கொடுமைப்படுத்தி இழுத்து சென்றார்கள்.

இந்நிலையில், எனக்கும், என்னுடைய அண்ணனுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பகிரங்கமாக கூறினார். இன்ஸ்பெக்டர் மகளே இப்படி சொன்னதால் அதிர்ந்துப்போன போலீசார்.

இந்நிலையில், முறையிட்ட போலீசாரிடமும், நண்பர்கள், சொந்தக்காரர்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க உள்ளதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். 

இது பகிரங்க மன்னிப்பு கேட்க உள்ளதாக வெளியான செய்தியில்; கடந்த மாதம் 26 ஆம் தேதி என் அண்ணன், மற்றும் அண்ணி ஆகியோருடன் கொடுத்த குடும்ப பிரச்சனையை, பிரஸ் மீட் வைத்து தெரிவித்ததில், அது சம்பந்தமாக காவல் துறையிடமும், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க நாளை செய்தியாளர்கலை சந்திக்கவுள்ளேன்.

போலீஸ் மகளே பெண் இன்ஸ்பெக்டர் மீது பெற்ற மகளே இப்படி ஒரு புகார் சொன்னதும், இப்போது பகிரங்கமாக மன்னிப்புக்கேட்டதும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.