டேய் நானும் மதுரைக்காரன் தாண்டா... என சினிமா ஹீரோ மாதிரி போதையில் போலீசாரை வண்ட வண்டயாக திட்டியதால், போலீஸ் தூக்கிக்கொண்டு போய், போதை தெளியவிட்டு, கஞ்சி காய்ச்சியதில் அவர் மதுரை விளாங்குடி நவீன் என்பது தெரியவந்துள்ளது.

இன்று  அதிகாலை 2.30 மணி இசிஆர் சாலை நீலாங்கரையில்  .அதிவேகமாக தாறுமாறாக குலுங்கிக்கொண்டு வந்த ரெட் கலர் கார்  ஒன்று,  ரோட்டின் ஓரமாக நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ மீது பயங்கர வேகமாக மோதியது. இதில் அந்த ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது. ஆனால் டிரைவர் சுதாரித்துக்கொண்டு பக்கவாட்டில் தாவிவிட்டார். அதிவேகமாக மோதிய அந்த கார் அங்கிருந்த காம்பவுண்ட் சுவர் மீது மோதி நின்றது.  

இதனை பார்த்த காலை ரோந்துப்பணியில் இருந்த போலீஸ் பதறியடித்து ஓடிவந்தனர். இதனையடுத்து காருக்குள் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால், இளைஞர்கள் போதையில் இருந்துள்ளனர். அப்போது  ஒருவர் மட்டும் காரை விட்டு இறங்கி வந்து போலீசாருடன் ஆவேசமாக பேசுகிறார். சாதாரணமான பேச்சா அது? வாயில் வண்ட வண்டயாக கழுவி ஊத்தும் வார்த்தைகள், தள்ளாடிக்கொண்டே போலீஸ்காரர்களை திட்டியது  மட்டுமல்லாமல் ஒரு போலீசை  பிடித்து தள்ளி விட்டுள்ளார். 

எப்படியோ ஒரு வழியாக நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அலேக்காக தூக்கி சென்று விசாரித்ததில் அவரது பெயர் நவீன் என்பதும் சொந்த ஊர் மதுரை மாவட்டம் விளாங்குடி என்பதும் தெரியவந்தது. நவீன் செம போதையில் இருந்ததால், சில மணி நேரத்திற்கு பின்னே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். போலீசாரை காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டியதால் நீலாங்கரை போலீசாரும் போதை தெளியவிட்டு ஸ்டேஷனிலேயே வைத்து கஞ்சி காய்ச்சியுள்ளனர். மதுரை ஹீரோ இப்போ ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

இதேபோல கடந்த வருடம்,  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போக்குவரத்து சிக்னல் உள்ளது. அவ்வழியாக வந்த இளைஞர் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பைக்கில் செல்போனில் பேசியப்படி சென்றுள்ளார்.  இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி, சாவியை வண்டியிலிருந்து எடுத்து விட்டனர்.இதனால் கோபம் அடைந்த அந்த இளைஞர், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, ஒரு கட்டத்தில் காவலரை தாக்க முயன்றார். பண பலம் மற்றும் சொந்த ஊரில் தான் பெரிய ஆள் என்பதை நிரூபிக்கும் நோக்கிலும், நடிகர் விஜய் பாணியில், சாவியே எடு.. சாவிய எடு...என திரும்ப திரும்ப ஆக்ரோஷமாக பேசிய வீடியோ வெளியாகி வைரலானது.

இதனை அடுத்து, கடந்த வாரம் சென்னை நுங்கம்பாக்கத்தில் 4 இளைஞர்கள் திருநங்கைகளிடம் இரவு நேரத்தில் பேசி கொண்டிருந்தனர். அவர்கள் போதையில் இருந்ததால், அங்கிருந்த போலீஸ்காரர் அவர்களை கிளம்பி போக சொன்னார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும், அவரிடமிருந்த லத்தியை வாங்கி போலீஸ் என்று கூட பார்க்காமல் தாக்கினர். இந்த வீடியோவும் வைரலாகி  . அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது இல்லாமல், 4 அலேக்கா தூக்கி கொண்டு போய் ஜெயிலில் போட்டது போலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.