இளைஞர்களிடம் லட்சம் முதல் கோடி வரை.. சுருட்டிய தாய்,மகள் - கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பரபரப்பு சம்பவம் !

சென்னை வேளச்சேரி, பாரதி நகர், பரணி தெருவை சேர்ந்தவர் தன்ஷிகா(34), இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் ஆவார். 

Police have arrested a mother and daughter who cheated several people and extorted money at chennai

வெளிநாடு சென்று வேலை பார்க்கலாம் என்று எண்ணி தனது நண்பர் மூலம் கோயம்பேட்டில் உள்ள ‘Assyst Career Generating Pvt Ltd’ என்ற நிறுவனத்தை நேரில் சென்று அணுகியுள்ளார். அங்கு கிளீனா கிரியேட்டர் (29), மற்றும் அவரது அம்மா அனிதா கிரியேட்டர் (59), நல்ல விதமாக பேசி அவருடன் பழகியுள்ளனர். பிறகு 25 லட்ச ரூபாய் பணத்தை பெற்று போர்ச்சுக்கல் நாட்டிற்கு அனுப்புவதாக கூறியுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்தனர்.

Police have arrested a mother and daughter who cheated several people and extorted money at chennai

நெருக்கடி கொடுத்த போது கொஞ்சம் கொஞ்சமாக 11 லட்சம் வரை திரும்ப தந்து விட்டனர். ஒரு கட்டத்தில் செல்போன் எண்ணை அணைத்து வைத்து விட்டனர். பிறகு அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என்று பார்த்தால் , அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக 22-12-2021 அன்று வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படாததால் தன்ஷிகா, அடையார் துணை ஆணையர் மகேந்திரன் அவர்களை கடந்த மாதம் அணுகினார். 

Police have arrested a mother and daughter who cheated several people and extorted money at chennai

அவர் வழக்குப்பதிவு செய்ய உத்தவிட்டு, லுக் அவுட் நோட்டிஸும் வழங்கினார். நேற்று  கிளீனா மற்றும் அவரது தாய் அனிதா இருவரும் சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். அமெரிக்கா செல்லவிருந்த கிளீனாவை அவரது தாய் வழியனுப்ப சென்றிருந்தார். அப்போது லுக் அவுட் நோட்டிஸின் அடிப்படையில் அவர்களை பிடித்து வேளச்சேரி போலிஸாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த போலீஸார் விசாரித்ததில் இவர்கள் இது போல் பலபேரை ஏமாற்றி கோடிக் கணக்கில் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

இதையும் படிங்க : அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1,000.. எப்போ கிடைக்கும் ? அமைச்சர் சொன்ன மகிழ்ச்சி செய்தி !!

இதையும் படிங்க : "இலங்கையில் பெண்களின் உதிரம் கொட்டப்படுகிறது..அந்த நாடு உருப்படாது.. அன்றே சொன்ன ரஜினிகாந்த் - வைரல் வீடியோ !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios