கடந்த சில நாட்களுக்கு முன்பாக விபச்சாரம் செய்து இளைஞரிடம் காசு ஏமாற்றியதாக கைது செய்யப்பட்ட ஜெயந்தியிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள். இருவரின் பிளாஷ்பேக் காறித்துப்பும் படியாக இருக்கிறது.

ஆமாம், முதன்முதலாக ஜெயந்தி பஸ்சுக்காக கோயம்பேட்டில் காத்திருந்தாராம். அப்போதுதான் ஏட்டு அந்த பக்கமாக வந்திருக்கிறார். பேச்சும் கொடுத்திருக்கிறார். பிறகு விசாரணைக்காக ஸ்டேஷன் வரை கூட்டிட்டு போயிருக்கார். அப்போது ஜெயந்தி தன் வீட்டு கதையெல்லாம் கண்ணீர் வழிய சொல்லவும், எட்டு பார்த்திபனுக்கு ஜெயந்தி மேல் ஒருவிதமான பீலிங் வந்திருக்கிறது.  அந்த பீலிங்ஸ் லைவ்வாக மாறி இரண்டுபேரும் உல்லாசமாக இருக்கும் அளவிற்கு அடுத்த லெவலுக்கு சென்றுள்ளார்கள். அப்போது தான் ஜெயந்தியை வைத்து விபச்சாரம் செய்ய ஐடியா வந்துள்ளது. அதனால் விபச்சாரம் செய்ய ஜெயந்திக்கு ஏட்டு வீடு எடுத்து தந்திருக்கிறார். ஒரு பக்கம் கஸ்டமர்கள் மூலம் ஜெயந்திக்கு பணம் என்றால் மற்றொரு பக்கம் போலி ரெய்டு மூலம் ஏட்டு பார்த்திபனுக்கு பணம். இப்படிதான் ரெண்டு பேரும் இவ்வளவு நாள் கலக்கியிருக்கிறார்கள்.  ஆனால் கஸ்டமர் கால் டாக்சி டிரைவர் விசுவநாதன் ஜெயந்தி வீட்டுக்கு வந்தபோதுதான் பண தகராறு வெடித்தது. இருவரும் ஜாலியாக இருப்பதற்கு 2000 ஜெயந்தி கேட்டுள்ளார். 

ஆனால் 1500 தான் தருவேன் என டிரைவர் கூறியுள்ளார். முதலில் சரி என்று சொல்லிவிட்டு, பிறகுதான் எக்ஸ்ட்ரா பணத்தை ஜெயந்தி கேட்டுள்ளார். அதற்கு காரணம் விசுவநாதனிடம் நிறைய பணம் இருந்ததை பார்த்துவிட்டார்.  இதுதான் தகராறாக வெடித்திருக்கிறது. உடனே ஜெயந்தி ஏட்டுக்கு போன் பண்ணவும், அவர் விரைந்து வந்து விசுவநாதனை அடித்து உதைத்து பைக்கையும் பிடுங்கி உள்ளார். விசுவநாதனிடம் இருந்த பணத்தையும் 2 பேரும் பிடுங்கி கொண்டனர். விசுவநாதனை தூக்கி உள்ளே வைக்க ஜெயந்தியும், ஏட்டு பார்த்திபனும் பிளான் பண்ணினார்கள். இன்னொரு பக்கம் விசுவநாதன் போலிசில் புகார் சொன்னார். அதில் இருவரும் சிக்கிக் கொண்டனர். தற்போது ஜெயந்தி புழலில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். அவரது வாயிலிருந்து இதுவரை ஏட்டு பார்த்திபனை தெரியும் என்று மட்டும் ஒரு வார்த்தை வந்திருக்கிறதாம். இப்போதைக்கு வேறு எதையும் அவர் சொல்லவில்லை போலிருக்கிறது. ஆனால் ஏட்டுவை காணவில்லை என்பதால் அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். 

மேலும் ஜெயந்தியின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதில் சில வீடியோக்களும் இருக்கிறதாம். இதில்தான் எக்கச்சக்கமான விஷயம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. ஏட்டுவும், ஜெயந்தியும் சேர்ந்து ஏதாவது பெண்களை தங்கள் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்களா என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.